For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பர்தா ஏன் போடல.. ஆப்கன் பெண்களை விரட்டி விரட்டி அடித்த தாலிபன்கள்.. சிதறி ஓடிய மாணவிகள்.. கொடுமை

ஆப்கனில் பல்கலைக்கழக மாணவிகள் மீது தாலிபன்கள் தாக்குதல் நடத்தி உள்ளார்கள்

Google Oneindia Tamil News

ஆப்கன்: பல்கலைக்கழகத்துக்குள் நுழைய விடாமல் அங்குள்ள மாணவிகளை, தலிபான்கள் தடுத்து நிறுத்தி விரட்டியடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கூட்டிவருகிறது.

ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.. எதிர்பார்த்தபடியே ஆடைக்கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்..

பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது. ஒரு வருடத்துக்கும் மேலாகவே ஆப்கன் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

போர் வேண்டாம்.. பேசி தீர்க்கலாம் -ரஷ்யா உக்ரைனிற்கு அட்வைஸ் செய்யும் தலிபான் அரசு!போர் வேண்டாம்.. பேசி தீர்க்கலாம் -ரஷ்யா உக்ரைனிற்கு அட்வைஸ் செய்யும் தலிபான் அரசு!

டீச்சர்கள்

டீச்சர்கள்

கல்வியை நோக்கி அடியெடுத்து வைத்து கொண்டிருந்த பெண்களுக்கு, உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதும், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதும், மீளா துயரில் ஆழ்த்தி வருகிறது. இப்படி பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தடை விதித்து, அவர்களுக்கு கல்வி அளிக்க மறுத்து வருவதற்கு ஐநா கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது.. திரைச்சீலை உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வேண்டும் என்றும், பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்துவர் என்றும் தாலிபன்கள் உத்தரவிட்டனர். அதேபோல, மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டது..

 பட்டதாரிகள்

பட்டதாரிகள்

பல்கலைக் கழகங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு, இடைக்கால அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அப்துல் பாகி ஹக்கானி என்பவர் அங்குள்ள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "கடந்த 20 வருடங்களாக தலிபான்கள் ஆட்சியில் இல்லாத நேரத்தில், நேட்டோ, அமெரிக்க பாதுகாப்பின் கீழ் ஆட்சி நடந்தது.. அப்போதைய ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகியோரது ஆட்சியில் பள்ளிகளில், பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் நிறைய பேர் படித்துள்ளனர்.. அப்படி படித்து பெற்ற பட்டத்தால் யாருக்கும் எந்தவிதமான பயனும் இல்லை.

மதரஸா

மதரஸா

மதிப்பு இந்த நாட்டிற்கு தேசத்துக்கு பயன்படும் வகையில், அதாவது திறமை மற்றும் மதிப்பை உணர்ந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களையே பணியமர்த்த வேண்டும்... இளைய சமுதாயத்தின் அறிவை ஆப்கனின் எதிர்காலத்துக்கு பயன்படுத்த வேண்டும்... இன்றுள்ள முதுகலை படிப்புகள், முனைவர் பட்டங்கள் எல்லாம் மதரஸாவில் படிக்கும் மதரீதியிலான படிப்புகளைவிட மதிப்பு குறைவானவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" என்றார். இந்த பேட்டிதான் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 பொற்காலம்

பொற்காலம்

காரணம், கடந்த 20 வருடங்களாகத்தான் ஆப்கன் மக்கள் தலைநிமிர தொடங்கினர்.. வீட்டை விட்டு வெளியேறி அந்த பெண்கள் படிக்க ஆரம்பித்தனர்.. வேலைக்கும் செல்ல துவங்கினர்.. ஆப்கன் வரலாற்றில் கல்விக்கான பொற்காலம் என்று கடந்த 20 வருடங்களை மட்டுமே சொல்ல முடியும்.. அப்படி இருக்கும்போது, அந்த 20 வருட கல்வி பயன்தரவில்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லி அதிரவைத்திருந்தார் அந்நாட்டு அமைச்சர்..!

 சிதறிய மாணவிகள்

சிதறிய மாணவிகள்

இந்நிலையில், ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. அது பல்கலைக்கழக மாணவிகளை தலிபான்கள் தாக்கும் வீடியோவாகும்.. இதை பார்த்து உலக நாடுகளே அதிர்ச்சியாகி வருகின்றனர்.. அந்த வீடியோவில், வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படாசவுன் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு ஏராளமான மாணவிகள் காத்து கொண்டு நிற்கிறார்கள்.. அவர்களை பல்கலைக்கழகத்துக்குள் நுழைய விடாமல் தலிபான்கள் தடுத்து நிறுத்துகிறார்கள்.. பிறகு, ஒரு அதிகாரி மாணவிகளை தாக்கி விரட்டி விரட்டியடிக்கிறார். இதனால் மாணவிகள் பயந்துகொண்டு, அங்கிருந்து சிதறி தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

பர்தா

பர்தா

இதற்கெல்லாம் காரணம், அந்த மாணவிகள் பர்தா அணியவில்லையாம்.. பர்தா அணியாததால் பல்கலைக் கழகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று சொன்னார்கள் தாலிபன்கள்.. ஆனால் மாணவிகள் எல்லாருமே பர்தாவை சரியாக அணிந்து இருந்தார்களாம்.. இருந்தாலும், அவர்களை கிளாஸுக்கு செல்ல விடாமல் தடுத்து விரட்டியடித்துள்ளனர்... மாணவிகளை தாக்கிய அந்த அதிகாரி யார் தெரியுமா? அவர்தான், தலிபான் அரசாங்கத்தின் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் அதிகாரியாம்..!!!

English summary
Taliban attacked university girl students and stopped them from going to classroom
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X