குல்பூஷனுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை.. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திஹேக்: முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் சிங் ஜாதவ் வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் அவரை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுத்தது தவறு என்றும் கண்டித்துள்ளார் நெதர்லாந்து நீதிபதி.

இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தீர்ப்பு வாசித்தனர். சர்வதேச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை வாசித்தனர். குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

The Kulbhushan Jadhav verdict in 9 points

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தத் தீர்ப்பு. அதன் முக்கிய அம்சங்கள்:

 • இந்தியாவும் பாகிஸ்தானும் குல்பூஷன் ஜாதவ் இந்திய குடிமகன்தான் என்பதை உறுதிசெய்துள்ளன.
 • குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்ட சூழல் சர்ச்சைக்குரியவையே.
 • வியன்னா ஒப்பந்தப்படி குல்பூஷண் ஜாதவ்வை சந்திக்க, தூதரக அணுகுமுறைக்கு பாகிஸ்தான் அனுமதி
  வழங்க வேண்டும்.
 • இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் தலையிட முதன்மையான முகாந்திரம் உள்ளது.
 • வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை
  விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றது இந்தியா.
 • வியன்னா ஒப்பந்தப்படி வேவு பார்ப்பவர்கள், பயங்கரவாதிகள் மற்றும் உளவுத்துறையுடன்
  தொடர்புடையவர்கள் தொடர்பான விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றம் தலையிட முடியாது என்றது
  பாகிஸ்தான்.
 • வாதங்களை கேட்ட சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
 • இறுதி தீர்ப்பு அளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
 • குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொள்ள பாகிஸ்தான் அனுமதி தராதது தவறு ஆகும்.
 • வியன்னா சாசனத்தை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The International Court of Justice stayed the execution of Kulbhushan Jadhav and upheld India’s right to consular access to the Ex - naval officer. The order runs into three pages and certain observations were made.
Please Wait while comments are loading...