For Daily Alerts
236 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக... யு.எஸ். கடற்படையில் முதல் பெண் அட்மிரல் நியமனம்
வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையின் முதல் பெண் அட்மிரலாக மிஷல் ஹோவர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
236 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் ஒரு புதிய நிகழ்ச்சி நடந்துள்ளது. அமெரிக்க கடற்படை தனது முதல் பெண் அட்மிரலை பெற்றுள்ளது. 1999ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு கப்பலை வழிநடத்திய முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணான மிஷல் ஹோவர்ட் தற்போது கடற்படையின் முதல் பெண் அட்மிரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் கடற்படை ஆபரேஷன்களின் துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 54 வயதாகும் ஹோவர்ட் 3 ஸ்டார் கடற்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த கேப்டன் ரிச்சர்ட் பிலிப்ஸை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். ரிச்சர்டை காப்பாற்ற சென்ற படைக்கு மிஷல் தான் தலைமை வகித்தார்.