For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இறந்து 20 ஆண்டுகளானாலும் மவுசு குறையாத டயானா .. பயன்படுத்திய பொருள்களுக்கு செம கிராக்கி!

இளவரசி டயானா இறந்து 20 ஆண்டுகள் ஆனபோதிலும் அவர் பயன்படுத்திய பொருள்கள் ஏலத்தில் மவுசு குறையாமல் விற்பனையாகின்றன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    இளவரசி டயானா பயன்படுத்திய பொருள்கள் ஏலம்-வீடியோ

    பாஸ்டன்: இளவரசி டயானா பயன்படுத்திய உடைகள், ஆபரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் இன்றும் மவுசு குறையாமல் விற்பனையாவதாக ஏலம் விடும் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

    பக்கிங்காம் அரண்மனையின் இளவரசியான டயானா தான் பயன்படுத்திய பொருள்களை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதற்காக பொருள்களை வழங்கியிருந்தார்.

    இதற்கு பிறகு சில மாதங்களில் கடந்த 1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி பாரீஸில் கார் விபத்தில் டயானா உயிரிழந்தார். இவர் இறந்து சுமார் 20 ஆண்டுகள் ஆகின்றன.

    ஏலத்தில் வெற்றி

    ஏலத்தில் வெற்றி

    டயானா பயன்படுத்திய உடைகள், நகைகள், ஆபரணங்கள், கையெழுத்திட்ட காகிதங்கள், புகைப்படங்கள், இவ்வளவு ஏன் அவர் திருமணத்தின் போது வெட்டப்பட்ட கேக்கின் ஒரு பகுதி உள்ளிட்ட டயானாவுக்கு நேரடி தொடர்புடைய பொருள்கள் ஏலத்துக்கு விடப்பட்டு வருகின்றன.

    ஆன்லைன் ஏலம்

    ஆன்லைன் ஏலம்

    இதற்காக பாஸ்டனில் உள்ள ஆர்ஆர் ஏல நிறுவனம் ஆன்லைனில் ஏலத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் வரும் 13-ஆம் தேதியுடன் ஆன்லைன் ஏலம் முடிவடையவுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது பொருள்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்குவதில் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

    டயானாவின் பை

    டயானாவின் பை

    இதுகுறித்து ஏல நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் பாபி லிவிங்கஸ்டன் கூறுகையில், டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆன பிறகும் அவரது உலகம் எங்கும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார். டயானா குழந்தை பருவத்தில் பயன்படுத்திய பொருள்கள், இள பருவம், திருமணத்தின்போது பயன்படுத்திய பொருள்கள் என 79 பொருள்கள் பல்வேறு தரப்பிடம் இருந்து கிடைக்கப்பெற்றன.

    15,000 டாலருக்கு மேல்...

    15,000 டாலருக்கு மேல்...

    கடந்த 1980-களில் டயானா பயன்படுத்திய வெள்ளியிலான ஹேண்ட் பேக் அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்தனுப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்மை உறுதியானவுடன் அந்த பேக் சுமார் 15,000 டாலர்களுக்கு மேல் விலை போகும். இதேபோல் இளம் வயது பருவத்தில் டயானா பயன்படுத்திய டி என்ற எழுத்து பொறிக்கப்பட்ட வெள்ளி நெக்லஸும் சுமார் 2,000 டாலர்களுக்கு மேல் விலை போகும். அவர் தன் மகன்களுடன் இருக்கும் புகைப்படம் பதித்த லாக்கட்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏலத்துக்கு சென்றது.

    டயானா பயன்படுத்திய ஸ்வெட்டர்

    டயானா பயன்படுத்திய ஸ்வெட்டர்

    டயானா சிறு வயதில் பயன்படுத்திய வெள்ளை நிற ஸ்வெட்டர். இதை அவரது வீட்டின் தலைமை சமையலர் வைத்திருந்தார். இதுவும் தற்போது ஏலத்தில் பங்கேற்கும். கடந்த 1981-ஆம் ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி டயானாவுக்கும், சார்லஸுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது அவரது திருமண கேக்கின் உறையில் "CD, Buckingham Palace, 29th July 1981" (சிடி( சார்லஸ்-டயானா), பக்கிங்காம் பேலஸ், 29 ஜூலை 1981) என்று எழுதப்பட்டிருந்தது. அதுவும் ஏலத்துக்கு செல்கிறது என்றார் லிவிங்ஸ்டன்.

    English summary
    Dozens of items with a direct connection to one of the most admired women Diana in the world from articles of clothing, to jewelry, to signed papers and photographs, and even to a piece of her wedding cake are for sale by Boston-based RR Auction.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X