நெருப்பால் சுட்டால்கூட உருகாது.. ‘வாவ்’ சொல்ல வைக்கும் சீனா தயாரித்த புதிய ஐஸ்கிரீம்!

நெருப்பிலும் உருகாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்து அசத்தியுள்ளது சீன நிறுவனம் ஒன்று.

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சீனா உருவாக்கியுள்ள, நெருப்பில் காட்டினாலும் உருகாத ஐஸ்கிரீம் வீடியோ ஒன்று இணையத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்கிரீமை உருகுவதற்கு முன் சாப்பிட்டு விடுவது புத்திசாலித்தனம் என்று கூறுவார்கள். ஆனால் வெயில் காலத்திலோ ஐஸ்கிரீமை அதன் கவரில் இருந்து வெளியில் எடுப்பதற்கு முன்னதாகவே உருக ஆரம்பித்து விடும். கொஞ்சம் ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டுமென்றால், அதற்கெல்லாம் சில ஐஸ்கிரீம்கள் ஒத்துழைக்கவே ஒத்துழைக்காது. ஏதோ ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளப் போவதுபோல், வேகவேகமாக சாப்பிட்டு முடிக்க வேண்டும்.

ஆனால், இனி அந்தப் பிரச்சினையே இருக்காது என்கிறது சீன நிறுவனம் ஒன்று. இவர்கள் உருவாக்கியுள்ள ஐஸ்கிரீமை நெருப்பில் காட்டினால்கூட உருகாதாம்.

உருகாத ஐஸ்கிரீம்

உருகாத ஐஸ்கிரீம்

சீனாவின் பீஜிங் நகரத்தைச் சேர்ந்த சைய்ஸ்கிரீம் (Chicecream) என்ற ஐஸ்கிரீம் நிறுவனம்தான் இந்த வித்தியாசமான ஐஸ்கிரீமை தயாரித்துள்ளது. தங்களது ஐஸ்கிரீம் எந்தளவிற்கு உறுதியானது என்பதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர் இந்த நிறுவனத்தினர். இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் டிரெண்ட்டிங் ஆகி இருக்கிறது.

உருகவேயில்லை

உருகவேயில்லை

ஐஸ்கிரீம்களின் ஹேர்ம்ஸ் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், வெள்ளை நிறத்தில் ஜெல்லி போன்ற தோற்றத்தில் குச்சி ஐஸ்கிரீம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. அதனை ஒருவர் நெருப்பால் சுடுகிறார். மற்ற ஐஸ்கிரீம்கள் என்றால், ஒரு நிமிடம் வெளியில் வைத்திருந்தாலே, அந்த தட்பவெப்பத்தால் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பிக்கும்.

விலை கொஞ்சம் அதிகம்

விலை கொஞ்சம் அதிகம்

ஆனால் இந்த ஐஸ்கிரீமோ, நெருப்பால் சுட்ட போதும் உருகாமல் அப்படியே இருக்கிறது. இந்த ஐஸ்கிரீம் மீது 31 டிகிரி செல்சியஸ் ( அதாவது, 88 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் செலுத்தப்பட்டதாக அந்த ஐஸ்கிரீம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த ஐஸ்கிரீமின் விலை 66 சீன யுவான் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.780.

சர்ச்சை

சர்ச்சை

இந்த புதிய ஐஸ்கிரீம் மக்களை ஆச்சர்யப்படுத்தினாலும், பயமுறுத்தவும் தவறவில்லை. நெருப்பில்கூட உருகவில்லை என்றால் அதில் நிச்சயம் நிறைய ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும் என்ற சர்ச்சையும் எழுந்தது. இதனால் தங்களது புதிய ஐஸ்கிரீமின் மூலப் பொருட்கள் குறித்த விளக்கத்தையும் சைய்ஸ்கிரீம் வெளியிட்டுள்ளது.

இயற்கையான மூலப் பொருட்கள்

இயற்கையான மூலப் பொருட்கள்

அதில், 'தங்களது ஐஸ்கிரீமில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்கள் அனைத்தும் சீனாவின் தேசிய உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டவைதான் என்றும், ஐஸ்கிரீம் உருகவில்லை என்பதற்காக அதில் அதிக ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்குமோ என மக்கள் அஞ்சத்தேவையில்லை, இயற்கையான மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் மூல பொருட்களைக் கொண்டு ஐஸ்கிரீம் தயாரிப்பதாகவும்' அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

மேலும் சீனாவின் மூத்த தேசிய உணவு பாதுகாப்பு ஆய்வாளர் Wang Silu இந்த ஐஸ்கிரீமை தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்களும் பாதுகாப்பானது தான் என்று தெரிவித்துள்ளார். இதனால் இப்போதே அந்த ஐஸ்கிரீமை ருசி பார்க்க மக்கள் ஆவலாகி விட்டனர். இந்த உருகாத ஐஸ்கிரீமின் வீடியோவை சமூகவலைதளத்தில் சுமார் 1.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேர் லைக் செய்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+