For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆப்கான்: கந்தகாரில் வீடுகளை விட்டு வெளியேற கெடு- தாலிபான்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் கிளர்ச்சி

Google Oneindia Tamil News

கந்தகார்: ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரில் பொதுமக்களை வீடுகளை விட்டு வெளியேற தாலிபான்கள் கெடு விதித்தனர். தாலிபான்களின் இந்த உத்தரவுக்க்கு எதிராக பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்திருந்தனர். இருந்தபோதும் நாடாளுமன்றம் உள்ளிட்டவை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

3 நாட்கள்தான்.. ஆளுநராக சனிக்கிழமை பதவி ஏற்கும் ஆ.என் ரவி.. களமிறக்கப்பட்டது ஏன்? என்ன காரணம்? 3 நாட்கள்தான்.. ஆளுநராக சனிக்கிழமை பதவி ஏற்கும் ஆ.என் ரவி.. களமிறக்கப்பட்டது ஏன்? என்ன காரணம்?

தாலிபான்கள் அரசாங்கத்தில் பெண்களுக்கான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. தலைநகர் காபூலில் தங்களது உரிமைகளுக்காக போராடிய பெண்கள் மீது தாலிபான்கள் கொடூரமான தாக்குதல் நடத்தினர்.

வெளியேறிய பொதுமக்கள்

1996-2001 காலத்தில் தாலிபான்கள் கொடுங்கோலாட்சி நடத்தினர். இந்த அச்சம் இப்போதும் நீடிப்பதால் பல்லாயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் சொந்த நாட்டை விட்டே வெளியேறிவிட்டனர். இன்னமும் அண்டை நாடுகளின் எல்லைகள் எப்போது திறக்கும் என பல்லாயிரக்கணக்கானோர் பசி பட்டினியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தத்தளித்து வருகின்றனர்.

சர்வதேச நாடுகள்

சர்வதேச நாடுகள்

இதனிடையே பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் தாலிபான்களுடன் நல்லுறவுக்கான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. பாகிஸ்தானின் சரக்கு விமானம் காபூல் விமான நிலையத்தில் தரை இறங்கியது. தாலிபான்கள் ஆட்சியில் காபூலுக்கு வந்த முதலாவது வெளிநாட்டு விமானம் இதுதான். இதனிடையே சவுதி அரேபியா, உஸ்பெஸ்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் டன் கணக்கில் உணவு, மருந்து பொருட்களை ஆப்கானுக்கு அனுப்பி வருகின்றன.

போராளிகள் வேட்டை

போராளிகள் வேட்டை

தாலிபான்கள் இந்த முறை கொடுங்கோலாட்சியை நடத்த மாட்டார்கள் என்கிற நம்பிக்கை உலக நாடுகளிடம் உண்டு. ஆனால் ஒவ்வொருநாளும் ஆப்கானில் இருந்து வரும் செய்திகள் உறைய வைத்து கொண்டிருக்கின்றன. பஞ்சசீர் மாகாணத்தில் தாலிபான்களை எதிர்த்து போரிட்ட வடக்கு படை போராளிகளை வீடு வீடாக தேடிச் சென்று வேட்டையாடுகின்றனர் என்கிற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்கள் போராட்டம்

இந்த நிலையில் கந்தகாரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை உடனே வீடுகளை விட்டு வெளியேற தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். அரசுக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வரும் இந்த மக்களை அப்புறப்படுத்திவிட்டு தாலிபான்களை குடியமர்த்த போகின்றனராம். தங்களது உடைமைகளை கூட எடுக்க அவகாசம் கொடுக்காமல் தாலிபான்கள் வெளியேற்றியதற்கு எதிராக ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் கந்தகாரில் போராட்டம் நடத்தினர். மேலும் கந்தகார் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டும் போராட்ட்டம் நடத்தினர். இதனால் கந்தகாரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

English summary
Thousands Residents hold protest in Kandahar against Taliban’s decision of forcing them to leave their houses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X