For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிக டிராஃபிக் சத்தம்... ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இரவு பகல் என்று எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல், வாகனப் போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் ஆண்களின் ஆண்மை பறிபோய் மலட்டுத் தன்மை ஏற்படும் என்று அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெள

By Devarajan
Google Oneindia Tamil News

சியோல்: போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் குடியிருப்பது ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை உண்டாக்கும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து சியோல் நேஷனல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில், போக்குவரத்து நெரிசலால் ஏற்ப அதிக அளவு சத்தத்தால் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Traffic and Vehicle alarms will cause impotency in Males

குறிப்பாக இரவு நேரத்தில் மிகவும் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பணிபுரிவோர் அல்லது தங்கியிருப்போர் இத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றனர்.

55 டெசிபல் ஒலி அளவுக்கு மேல் இருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே இரவு நேரத்தில் ஒலி அளவு 40 டெசிபல்லுக்கு மேல் இருக்க கூடாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இது தவிர இதய நோய்கள், மனநிலை பாதிப்பு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் போன்றவை உருவாகும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2 லட்சத்து 6 ஆயிரத்து ஆண்களின் சுகாதார காப்பீடு மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 20 முதல் 59 வயது வரை உள்ள ஆண்களிடம் 8 ஆண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Traffic and Vehicle alarms will cause impotency in Males, reveals a study conducted by South Korean scientists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X