அமெரிக்கப் பொருட்களை வாங்கு... அமெரிக்கர்களை வேலையில் அமர்த்து.. ட்ரம்பின் சுதேசி உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கெனோஷா(யு.எஸ்): விஸ்கான்ஸின் மாநிலத்தின் கெனோஷா நகரில் ஸ்னாப் ஆன் டூல்ஸ் நிறுவன நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார்.

அங்கிருந்தவாறே புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்கப் பொருட்களை வாங்குவோம், அமெரிக்கர்களை வேலையில் அமர்த்துவோம் (Buy American Hire American) என்று இந்த புதிய உத்தரவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

Trump signs order to enforce buy American and hire American

இந்த உத்தரவு மூலம் தனியார் நிறுவனங்களுக்கோ, தனி நபருக்கோ அமெரிக்கப் பொருட்களைத் தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அமெரிக்க அரசுத் துறையில் வாங்கப்படும் பொருட்களுக்கு , அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்படும்

ஒவ்வொரு துறையிலும் , அனைத்து பிரிவுகளிலும் பின்பற்றப்படும் கொள்முதல் கொள்கைகளை மறு ஆய்வு செய்து அமெரிக்க பொருட்களை வாங்குவதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்படும்.

அமெரிக்க அரசு காண்ட்ராக்டர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டீல்களையே, அரசுத் துறை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

ஹெச் 1 பி விசா கண்காணிப்பு

குடியுரிமைத் துறை சார்பில் ஏற்கனவே கள ஆய்வுகள் மூலம் ஹெச் 1 பி விசா முறைகேடுகளை கண்டறிய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. (ஒன் இந்தியா செய்தியைப் பார்க்க)

அரசு சார்பிலும் ஹெச் 1 பி விசா முறைகேடுகளை தடுத்து நிறுத்த , சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப் ஹெச்1 பி விசாவில் நடைபெற்று வரும் முறைகேடுகள் பற்றி கூறினார்.

அமெரிக்காவில் தகுதி வாய்ந்த உயர் தொழில் நுட்ப வல்லுனர்கள் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே வெளி நாட்டிலிருந்து ஹெச் 1 பி விசா மூலம் ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

தற்போது ஹெச் 1 பி விசாக்கள் , முறைகேடாக குறைந்த ஊதியத்தில் வெளி நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தப் பயன்படுத்தப்படுகின்றன.

குறைந்த ஊதியத்தில் வெளி நாட்டிலிருந்து ஹெச் 1 பி விசாவில் வருபவர்களால், அமெரிக்க ஊழியர்களின் வேலை பறிபோகிறது.

அது மட்டுமல்லாமல், உயர் தொழில் நுட்ப வல்லுனர்கள் தேவைப்படும் நிறுவன்ங்களால் வெளி நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த முடியவில்லை.

சம்மந்தப்பட்ட் அனைத்து துறைகளும் ஹெச் 1 பி விசா முறைகேடுகள் பற்றி தீவிரமாக ஆராய்ந்து தக்க முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு மூலம் ட்ரம்ப் கேட்டுள்ளார்.

ஆனாலும் ஹெச் 1 பி விசா எண்ணிக்கையை குறைப்பது பற்றியோ, புதிய சட்டங்கள் அல்லது சட்ட சீர்திருத்தம் பற்றி ஏதும் குறிப்பிடப் படவில்லை.

குறைவான ஊதியத்துடன் ஹெச் 1 பி விசா விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தெரிகிறது.அதே போல் விசாவில் குறிப்பிட்ட ஊதியத்தை வழங்காத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.

தனக்கு வாக்களித்தவர்களுக்க் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் ட்ரம்பின் சமீபத்திய நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

அடுத்த அதிபர் தேர்தலை மனதில் வைத்து இப்போதே, ட்ரம்ப் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

-இர தினகர்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
President Trump signed an executive order for Buy American Hire American during his visit to Snap On Tools facility in Kenosha, Wisconsin. Federal departments and contractors will be forced to buy American manufactured goods and steel. H1 B Visa program will be strictly enforced by the rules to ensure, these visas are used for high skilled employees, when not available in US.
Please Wait while comments are loading...