உக்ரைன் மாஸ் பதிலடி! சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானங்கள்! நொறுங்கி விழுந்தது.. புடினுக்கு முதல் அடி
மாஸ்கோ: ரஷ்யாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் இருக்கும் லுஹான்ஸ்க் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
Recommended Video
போர் தொடங்கி வெறும் 3 மணி நேரத்திற்கு உள்ளாகவே ரஷ்யா - உக்ரைன் மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. உக்ரைன் உள்ளே சென்று தங்கும்படி ரஷ்ய படைகளுக்கு புடின் உத்தரவிட்டார்.
தற்போது ரஷ்யா உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தி வருகிறது. அது உக்ரைன் அரசுக்கு எதிரான புரட்சி படைகள் இருக்கும், ரஷ்யாவின் கொஞ்சம் ஆதரவாக இருக்கும் பகுதி ஆகும்.

ஏவுகணை
ரஷ்யா தற்போது உக்ரைனில் தீவிரமான ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதேபோல் ரஷ்யாவின் நவீன போர் விமானங்கள் உக்ரைன் எல்லைக்கு உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சுகோய், மிகோயான், டுபெலாவ் வகையை சேர்ந்த பல்வேறு போர் விமானங்கள் ரஷ்யாவில் இருந்து உக்ரைனுக்கு உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யா உக்ரைன்
விமானங்கள் மூலம் தொடர்ந்து குண்டுகள் போடப்பட்டு வருவதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றஞ்சாட்டி உள்ளது. அதேபோல் போர்சிபில் விமான நிலையத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதியை குறி வைத்துதான் ரஷ்யா இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளது. தலைநகர் கையிவ், முக்கிய நகரங்களான கர்க்கிவ், டின்ப்ரோ ஆகிய பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ராணுவ ரீதியாக உக்ரைன் வலிமையாக இருக்கும் பகுதிகளை முதலில் ரஷ்யா தாக்கி உள்ளது.

எங்கு நடக்கிறது
கர்க்கிவ், பெலாரஸ், டின்ப்ரோ ஆகியவை மோசமாக பாதிக்கப்படும் நகரங்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. இங்கே ரஷ்யாவின் தரை படையும் நுழைந்து உள்ளது. ரஷ்யாவின் தரை படை தென் உக்ரைனுக்கு உள்ளே நுழைந்ததாக வைக்கப்படும் புகார்களை உக்ரைன் மறுத்துள்ளது. கிழக்கு பகுதி மட்டுமே தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 1 லட்சம் ரஷ்ய படைகள் உக்ரைன் உள்ளே நுழைந்துள்ளது.

ராணுவ தளவாடங்கள்
உக்ரைனில் இருக்கும் ராணுவ தளவாடங்கள், அமைச்சகத்தின் கட்டிடங்கள் ஆகியவற்றை குறி வைத்து ரஷ்யா தாக்கி வருகிறது. அதேபோல் Iskander-M வகை சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மூலமும் ரஷ்யா உக்ரைனை தாக்கி வருகிறது. இந்த நிலையில்தான் ரஷ்யாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் இருக்கும் லுஹான்ஸ்க் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

ரஷ்ய விமானங்கள்
அங்கு ஐந்து ரஷ்ய விமானங்கள் மற்றும் ஒரு ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா காலையில் இருந்து உக்ரைனில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டு இருந்தது. இந்த நிலையில்தான் முதல்முறையாக ரஷ்யா பக்கமும் சேதம் ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

முதல் அடி
ரஷ்யாவின் தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. வான்வெளி தாக்குதல்களுக்கு ஏவுகணை மறிப்பு சிஸ்டம் மூலமும், சிறிய ரக ஏவுகணைகள் மூலம் விமானங்களை சுட்டு வீழ்த்தியும் ரஷ்யா மீது உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும், ரஷ்யா உலக அரங்கில் தனித்து விடப்படும் அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications