Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபத்து காத்திருக்கு.. அணு ஆயுத அட்டாக்கா? போர் உரையில் புடின் "சிக்னல்".. கொதிக்கும் அமெரிக்கா!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் தனது உரையில் அணு ஆயுதம் குறித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா -- உக்ரைன் போர் மேகங்கள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக சூழ்ந்து வந்த நிலையில் தற்போது அடைமழை பெய்ய தொடங்கி உள்ளது. ஆம் கடைசியில் உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிவிட்டது. ஒரு காலத்தில் ஒரே நாடாக சோவியத் கீழே இருந்த இரண்டும் தற்போது மாறி மாறி மோதிக்கொண்டு இருக்கின்றன.

உக்ரைன் நேட்டோ படையுடனும், அமெரிக்காவுடனும் நெருக்கம் காட்டி வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது படை தொடுப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இன்று காலை இரண்டு நாடுகளுக்கும் போர் வெடித்தது.

அணு ஆயுத மிஸைல் சோதனை

அணு ஆயுத மிஸைல் சோதனை

ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்பட்டுள்ள நிலையில் சமீபத்தில்தான் ரஷ்யா உக்ரைன் அருகே கடல் எல்லையில் மிஸைல் சோதனை நடத்தியது. ஹைப்பர் சோனிக், சூப்பர் சோனிக் மிசைல்களை வைத்து சோதனை செய்தது. ரஷ்யா சோதனை செய்த ஏவுகணைகள் எல்லாமே அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆகும். இந்த அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்கும் ஏவுகணைகளை ரஷ்யா சரியாக உக்ரைன் எல்லையில் வைத்து வெற்றிகரமாக சோதனை செய்தது.

புடின் நேரில் பார்வையிட்டார்

புடின் நேரில் பார்வையிட்டார்

உலகில் இருப்பதில் அணு ஆயுதங்களில் பாதி ரஷ்யாவிடம்தான் உள்ளது. இது அதிகாரபூர்வ கணக்கு. உலகிலேயே அதிக அணு ஆயுதங்கள் உள்ள நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. 6400 அணு ஆயுதங்களை ரஷ்யா இதுவரை தங்கள் கிடங்குகளில் பாதுகாத்து வைத்து உள்ளது; சோவியத் காலத்தில் அந்த யூனியனிடம் 45000 அணு ஆயுதங்கள் இருந்தன. சோவியத் உடைந்த பின் இந்த அணு ஆயுதங்களால் பின்னர் கைவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை புடின் நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் உக்ரைன்

இன்னொரு பக்கம் உக்ரைன்

இன்னொரு பக்கம் உக்ரைனிடம் அணு ஆயுதங்கள் சோவியத் காலத்தில் இருந்தது. அதெல்லாம் சோவியத் உருவாக்கிய அணு ஆயுதங்கள். சோவியத் உடைந்த பின் 1991ல் உக்ரைன் அணு ஆயுதங்களை கைவிட்டது. அமெரிக்கா, யு.கே மற்றும் ரஷ்யா கேட்டுக்கொண்டதற்கு இணங்க உக்ரைன் அணு ஆயுதங்களை கைவிட்டது. உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று உக்ரைனுக்கு ரஷ்யாவும் வாக்கு கொடுத்தது. இதனால் உக்ரைன் அணு ஆயுதங்களை கைவிட்டது.

உக்ரைன் அணு ஆயுதம் இல்லை

உக்ரைன் அணு ஆயுதம் இல்லை

உக்ரைனிடம் அதிகாரபூர்வமாக அணு ஆயுதம் இல்லை. ஆனாலும் அமெரிக்க படைகள், நேட்டோ படைகள் உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை வழங்கி இருப்பதாக ரஷ்யா புகார் வைக்கிறது. இதை இன்று போர் உரையில் ரஷ்ய அதிபர் புடினும் குறிப்பிட்டார். அதில், அணு ஆயுத தொழில்நுட்பங்களை மேற்கு உலக நாடுகள் உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. ஆனால் இது ரஷ்யாவிற்கான ஆபத்தை ஏற்படுத்தும். இப்போது இல்லை என்றாலும் எதிர்காலத்தில் ரஷ்யாவிற்கு இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படும். இது ரியல் டேன்ஜர்.

புடின்

புடின்

உக்ரைன் இப்போது அணு ஆயுதம் தயாரிக்க முயன்று வருகிறது. மேற்கு உலக நாடுகளின் உதவியுடன் உக்ரைன் அணு ஆயுதங்களை தயாரிக்க முயன்று வருகிறது. ரஷ்யாவிற்கு உள்ளே தாக்குதல் நடத்தும் அளவிற்கு அதிக தூரம் தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் உருவாக்கி வருகிறது. அவர்களுக்கு மேற்கு உலக நாடுகள் ஆதரவாக உள்ளது. ஆபத்து காத்திருக்கு. நாம் இதற்கு எதிர்காலத்தில் பதில் அளிப்பதை விட இப்போதே பதில் அளிக்க வேண்டும். உக்ரைனுக்கு அணு ஆயுதம் கொடுப்பதற்காக அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை செலவு செய்து வருகிறது, என்று புடின் புகார் வைத்தார்.

புடின் பேச்சு

புடின் பேச்சு

புடின் வைத்த இந்த புகார் அமெரிக்காவை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. நாங்கள் ஆயுதங்கள் எதையும் உக்ரைனுக்கு கொடுக்கவில்லை. உக்ரைன் நாட்டிற்கு நாங்கள் அணு ஆயுதங்களை வழங்குவதாக ரஷ்யா கூறுவதை ஏற்க முடியாது. இது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்று அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. ரஷ்ய அதிபர் புடினின் இந்த பேச்சு அணு ஆயுத தாக்குதல்கள், மோதல்களுக்கான சிக்னலாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் இப்படி அணு ஆயுத போர் எதுவும் இப்போது வர வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

அமெரிக்கா பாய்ச்சல்

அமெரிக்கா பாய்ச்சல்

இந்த போரில் நேராக சம்பந்தப்பட்டு இருக்கும் ரஷ்யாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளன. ,மறைமுகமாக சம்பந்தப்பட்டு இருக்கும் அமெரிக்கா, சீனா, நேட்டோ நாடுகளிடமும் ஏகப்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. இதனால் ஒரு நாடு அணு ஆயுதத்தை எடுத்தால் கண்டிப்பாக இன்னொரு நாடும் அணு ஆயுதத்தை தூக்கும் நிலை ஏற்படும். ரஷ்யா, உக்ரைன் இரண்டும் உலகம் முழுக்க அதிக அளவில் தானியங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள்.

Recommended Video

    தொடங்கியது Russia- Ukraine War... India-க்கு என்ன பாதிப்பு தெரியுமா?
    ஏன் வராது

    ஏன் வராது

    ஒருவேளை அணு ஆயுத போர் நடந்தால் அது ரஷ்யாவையும் பாதிக்கும். ஏனென்றால் அமெரிக்கா போன்ற நாடுகளும் பதில் அணு ஆயுத தாக்குதல் நடத்தும். ரஷ்யாவிலும் பெரிய உணவு பஞ்சத்தை ஏற்படுத்தும். உலக அளவிலும் உணவு பஞ்சத்தை ஏற்படுத்தும். இதனால் கண்டிப்பாக இந்த மோதல் அணு ஆயுத போராக முடிய வாய்ப்பு இல்லை. ஆனால் உலக தலைவர்கள் எப்போதும் இவ்வளவு புத்திசாலித்தனமாக யோசித்தது கிடையாது என்பதால் அணு ஆயுத போராக இந்த மோதல் முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+