முறிந்த பேச்சுவார்த்தை.. முளைக்கும் புது நம்பிக்கை! ஒரே ரூமில் அமர்ந்து பேச அமெரிக்கா- ஈரான் சம்மதம்
தெஹ்ரான்: இஸ்லாமாபாத்தில் நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இரு தரப்பிற்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.. இருப்பினும், இரு நாடுகளுமே இப்போது அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ரெடியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளின் பிரதிநிதிகளும் நேரடியாக ஒரே ரூமில் அமர்ந்து பேச முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் மூண்டுள்ள யுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் தெளிவில்லாத ஒரு சூழலே நிலவி வருகிறது. வளைகுடாவில் எவ்வளவு காலம் பதற்றம் தொடர்கிறதே அதே அளவுக்கு உலகெங்கும் பிரச்சனைகள் எதிர்கொள்ளும். ஏனென்றால் உலக எரிசக்தி போக்குவரத்தின் இதயமாகக் கருதப்படும் ஹார்முஸை சுற்றியே பதற்றம் இருந்து வருகிறது.

அடுத்த ரவுண்டு பேச்சுவார்த்தை
இஸ்லாமாபாத்தில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உடன்பாடு இல்லாமல் கிளம்பினார். ஆனாலும், போர் நிறுத்தத்திற்கான தேவை அதிகமாக இருப்பதால், இரு நாடுகளும் மீண்டும் ஒருமுறை அமர்ந்து பேசச் சம்மதித்துள்ளன. அதேநேரம் முதல் ரவுண்டில் கலந்துகொண்ட அதே உயர்மட்டத் தலைவர்கள் வருவார்களா அல்லது இரண்டாம் கட்டத் தலைவர்கள் வருவார்களா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை.
தீவிர முயற்சி
பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த 'அமைதித் தூது' முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எப்படியாவது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு அமைதியை ஏற்படுத்த வேண்டும்.. வளைகுடாவில் மீண்டும் அமைதி திரும்பினால் தான் அனைவருக்கும் நல்லது என்பதால் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது வரை இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைக்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
அதேநேரம் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை எங்கே நடக்கும் என்பதில் தெளிவு இல்லை.. முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புகள் அதிகம். இரு நாடுகளுமே அங்கு வரச் சம்மதிக்கும் என்பதால் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடக்கும். ஒருவேளை பாகிஸ்தான் வேண்டாம் என அமெரிக்கா கருதினால், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்குப் பேச்சுவார்த்தை மாறலாம்.
எங்கு நடக்கும்
பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்பது தொடர்பாகத் தேதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், வரும் வியாழக்கிழமை, அதாவது ஏப்ரல் 16ம் தேதி இந்தப் பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாம்.
இப்போது நிலவும் தற்காலிகப் போர் நிறுத்தம் வரும் ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்குள் ஒரு நிரந்தர ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், மீண்டும் ஏவுகணைகள் பாயத் தொடங்கிவிடும் என்கிற அச்சம் உலக நாடுகளிடையே நிலவுகிறது. நிரந்தர போர் நிறுத்தம் இல்லை என்றாலும் குறைந்தது தற்காலிக போர் நிறுத்தத்தையாவது இரு நாடுகளும் நீடிக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒரே சிக்கல்
இப்போது யுரேனியம் செறிவூட்டல் விவகாரத்தில் மட்டுமே இரு தரப்பிற்கும் இடையே பிரச்சினை இருப்பதாகத் தெரிகிறது. ஒரு பக்கம் அமெரிக்கா 20 ஆண்டுகள் வரை யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த சொல்கிறது. ஆனால், ஈரான் அதைத் திட்டவட்டமாக ஏற்க மறுக்கிறது. அதிகபட்சம் 5 ஆண்டுகள் வேண்டும் என்றால் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவோம் என ஈரான் சொல்கிறது. இதுவே இரு தரப்பிற்கும் இடையேயான பிரச்சனைக்கு மூல காரணமாக உள்ளது.
-
ஆப்பு வச்சுடுச்சே அமெரிக்கா..ஈரானை வட்டமிட்ட ஸ்டீல் அரக்கன்கள்! படபடவென பறந்த எண்ணெய் ரேட்! சிக்கல்? -
டிரம்ப்-ஐ கலாய்க்கும் ஈரான் தலைவர்.. அமெரிக்க மக்களை வெறுப்பேத்திய போட்டோ.. என்ஜாய் பண்ணுங்க! -
10 நாள் தான் டைம்.. உலகமே ஸ்தம்பிக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த போராசிரியர்! -
இஸ்ரேல் மிரட்டல்.. அமெரிக்காவின் 3 மணிநேர கெடு.. உச்சக்கட்ட பரபரப்பில் ஈரான்..! -
டிரம்ப்பிற்கு பதிலடி கொடுக்க வரும் புதின்? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த ரஷ்யா! உலக போர் ஆபத்து? -
கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை டெஸ்ட் செய்த வடகொரியா.. அமெரிக்காவுக்கு ஷாக்! மாறும் போர் களம்! -
டிரம்ப்: அதிபர் பதவியில் இருந்து துரத்தியடிக்கப்படுவாரா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் பரபர வாக்கெடுப்பு -
ஈரான் ஈரக்குலையை நடுங்க வைக்கும் அறிவிப்பு.. டீல் பேசும் ட்ரம்ப்! நடு கடலில் தத்தளிக்கும் கப்பல்கள்! -
நேக்கா 2 கப்பலை வெளியேற்றிய ஈரான்.. ஹார்முஸ்-ல் தவிக்கும் 800 கப்பல்.. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அச்சம்! -
ஈரான் மேட்டரில் நட்டாற்றில் விடப்பட்ட டிரம்ப்.. கழன்று கொண்ட பிரிட்டன்! கடைசியில் இப்படி ஆயிடுச்சே! -
இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்? -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்!












Click it and Unblock the Notifications