For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாட்டி, தாத்தா, பேரப்பிள்ளைகளை பார்க்க அமெரிக்கா வர கூடாது.. 6 முஸ்லிம் நாடுகளுக்கு ட்ரம்ப் தடை

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஆறு முஸ்லிம் நாடுகள் மீதான விசா தடையை லேசாக தளர்த்தியுள்ளது டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு.

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் சிரியா, சூடான், லிபியா, ஈரான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைவதற்கு விசா வழங்க சில மாதங்களுக்கு தடை பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதற்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. போராட்டங்கள் வெடித்தன.

நெருங்கிய உறவுகள்

நெருங்கிய உறவுகள்

இந்நிலையில், இந்த 6 நாடுகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை உத்தரவு சிறிது தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சிரியா, சூடான், லிபியா, ஈரான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள், தங்களது நெருங்கிய உறவினர்களைப் பார்க்கவும் தொழில் ரீதியாக அமெரிக்கா வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 அனுமதிக்கப்பட்டுள்ள உறவுகள்

அனுமதிக்கப்பட்டுள்ள உறவுகள்

பெற்றோர், கணவன்/மனைவி, குழந்தைகள், வயதுக்கு வந்த மகன் அல்லது மகள், மருமகன், மருமகள், சகோதரர்கள் ஆகியோர் ஏற்கனவே அமெரிக்காவில் வசித்து வந்தால், அமெரிக்காவிற்குள் வர விசா வழங்கப்படும்.

வர்த்தகர்கள்

வர்த்தகர்கள்

இதுதவிர வர்த்தக தேவை உள்ளவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பித்து அமெரிக்கா செல்ல முடியும். ஆனால் உரிய ஆவணங்களை அமெரிக்க தூதரகத்தில் சமர்ப்பித்தே விசா பெற முடியும்.

 அனுமதிக்கவில்லையே

அனுமதிக்கவில்லையே

பாட்டி-தாத்தா, பேரப்பிள்ளைகள், அத்தை, சித்தி, பெரியம்மா, மாமா, சித்தப்பா, பெரியப்பா, அண்ணன் குழந்தைகள், அக்கா குழந்தைகள், ஒன்றுவிட்ட சகோதரர்கள், மாமா-அத்தை குழந்தைகள், மருமகன், மருமகள், திருமணம் செய்துகொள்ளப்போகிறவர்கள் உள்ளிட்ட 'விரிவாக்கப்பட்ட' உறவுகளை பார்க்க வர அனுமதிகிடையாது. வியாழக்கிழமை முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The US administration on Wednesday set new criteria for visa applicants from six mainly Muslim nations and all refugees that require a “close” family or business tie to the United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X