For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலைப்பாட்டை மாற்றிய WHO.. பூஸ்டர் டோஸ் "அவசர அவசியம்" என பரிந்துரை! சமமாக கிடைக்க அட்வைஸ்

Google Oneindia Tamil News

ஜெனீவா: கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பயன்பாட்டை உடனடியாக பரவலாக்க ஆதரவளிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓமிக்ரான் கொரோனா தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நேற்று இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், (TAG-CO-VAC) என்ற கலவை கொண்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை மக்களுக்கு உடனடியாக செலுத்த ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

WHO supports booster dose, But suggests for equal distribution

கொரோனாவால் அதிக ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் தீவிர நோய் பாதிப்பிற்கு உரியவர்கள், முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனாவால் ஏற்படும் தீவிர பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம் என்றும் உயிரிழப்புகள் குறையும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

"குறுகிய மற்றும் இடைக்கால தடுப்பூசி விநியோகம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஆனால் அனைத்து தரப்பினருக்கும் சமமான அளவில் தடுப்பூசி செலுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைத்து தரப்பினருக்கும் சமமாக கொரோனா தடுப்பூசி சென்றடைவதை உறுதிபடுத்த வேண்டும்." என WHO குழு அறிவுறுத்தி உள்ளது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தீவிர கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாப்பதாகவும், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை காட்டிலும் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது அதிக பயன்தருவதாகவும் உலக புகழ்பெற்ற மருத்துவ இதழான லான்செட் கடந்த 2021 நவம்பர் மாதம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையை உலக சுகாதார நிறுவன குழு சுட்டிக்காட்டியுள்ளது.

"ஆல்பா, பீட்டா, டெல்டா, ஓமைக்ரான் என அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உருவாகி வருவதால் காலத்திற்கு ஏற்ப கொரோனா தடுப்பூசிகளை புதுப்பிக்க வேண்டும். எதிர்காலத்திலும் கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வெவ்வேறு மாதிரி கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் பன்முகத் தன்மை கொண்ட தடுப்பூசிகளை அறிமுகம் செய்ய வேண்டும்" என அந்த குழு ஆலோசனை தெரிவித்துள்ளது.

புதிய கொரோனா மாதிரியான BA.2., ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பரவி இருப்பதாக தெரிவித்துள்ள WHO, தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், வெவ்வேறு கொரோனா மாதிரிகளிடம் தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த தகவலை தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பூசிகளின் பயன்கள் மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த ஆலோசனைகளை தங்களால் வழங்க முடியும் என உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்து உள்ளது.

English summary
The World Health Organization's technical advisory team said that it supports the immediate expansion of the booster dose use of the corona vaccine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X