Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘விட்ட இடத்திலேயே’.. தமிழக பாஜகவின் ‘பலே’ திட்டம்.. மேலிடத்துக்கு போன மெசேஜ்- கிடைத்த கிரீன் சிக்னல்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி : ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு குமரி முனையில் கிடைத்த வரவேற்பை காலி செய்ய தமிழக பாஜக ஒரு திட்டத்தைத் தீட்டியிருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, குமரியில் தொடங்கிய நடைபயணத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது பாஜக தலைமைக்கு ஷாக் கொடுத்தது.

ராகுலை டேமேஜ் செய்வதற்காக சமூக வலைதளங்களில் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்காமல் போகவே, குமரியையே மையமாக வைத்து இன்னொரு பிளான் போட்டிருக்கிறதாம் பாஜக.

அதன்படி, காந்தி ஜெயந்திக்கு பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வர இருப்பதாகவும், அதற்கான ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும் உற்சாகமாக கூறுகின்றனர் பாஜகவினர்.

குமரியில் தொடங்கிய ராகுல்

குமரியில் தொடங்கிய ராகுல்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ தூரத்துக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் செல்கிறார். இதற்காக கடந்த 7ஆம் தேதி கன்னியாகுமரி வந்த ராகுல் காந்தி அங்கிருந்து தனது நடைபயணத்தை தொடங்கினார். தமிழகத்தில் 4 நாட்கள் நடைபயணத்தின்போது பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து கேரளா சென்ற ராகுல் காந்தி, அங்கு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

பாஜக ஷாக்

பாஜக ஷாக்

ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் இன்று 10வது நாளாக தொடர்ந்து வருகிறது. காஷ்மீர் வரை 150 நாட்களில் பயணிக்க இருக்கிறார் ராகுல். ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பு பாஜக தலைமைக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதுவும் பாஜகவின் அடித்தளமும் பலமாக இருக்கும் கன்னியாகுமரி பகுதியில் ராகுல் காந்திக்கு கிடைத்த உற்சாக வரவேற்பு பாஜகவுக்கு பெரிய ஷாக் கொடுத்தது.

இலவச விளம்பரம்

இலவச விளம்பரம்

ராகுல் காந்தி இந்த நடைபயணத்தின்போது அணிந்த டிசர்ட்டின் விலை ரூபாய் 41,000 என்றும், அவர் செல்லும் கேரவன்களுக்கே பல லட்சம் செல்வாகிறது என்றும் இதுதான் எளிமையான நடைபயணமா என்றும் பாஜகவினர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர். அதற்கு காங்கிரஸ் கட்சியினர், மோடியின் பத்து லட்ச ரூபாய் சூட் குறித்தும், 1.5 லட்ச ரூபாய் கண் கண்ணாடி குறித்தும் பேச வேண்டி இருக்கும் என பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து, அடுத்த நாள் காங்கிரஸ் காரர்களும், இப்போது ராகுல் அணிந்திருக்கும் வாட்ச், ஷூ விலையை எல்லாம் பாஜகவினர் கண்டுபிடித்து சொல்வார்கள் என கிண்டல் செய்யவே, சமூக வலைதளங்களில் ராகுலின் நடைபயணம் ட்ரெண்ட் ஆனது.

ட்ரெண்டில் இருந்த ராகுல்

ட்ரெண்டில் இருந்த ராகுல்

மேலும், ராகுல் காந்தியின் டிசர்ட் திருப்பூரில் வாங்கியது என காங்கிரஸ் தலைவர்கள் விளக்கமும் அளித்தனர். இதனால், பாஜக விமர்சனம் கிண்டலைச் சந்தித்தது. மேலும், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ராகுல் காந்தியைச் சந்தித்ததும் உரையாடியதும் பாஜகவினரின் விமர்சனங்களால் பேசுபொருளானது. இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த 4 நாட்களும் இந்திய அளவில் பெரும் கவனம் பெற்றிருந்தார் ராகுல் காந்தி.

சுதாரித்த மேலிடம்

சுதாரித்த மேலிடம்

பாஜக தலைமை ராகுல் காந்தியின் நடைபயணத்தால் ஆட்டம் கண்டிருப்பதாகவும், காங்கிரஸின் வெற்றி தெற்கிலிருந்து தொடங்கி விட்டது என்றும் காங்கிரஸ் தலைவர்கள் சூளுரைத்தனர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாஜக மேலிடம், ஆஹா, நாமே ராகுல் நடைபயணத்துக்க்கு இலவச விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறோமே என்பதை உணர்ந்து, ராகுல் நடைபயணத்தை கண்டுகொள்ள வேண்டாம் என நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டதாம்.

பதிலடி திட்டம்

பதிலடி திட்டம்

கன்னியாகுமரியில் ராகுலுக்கு கிடைத்த வரவேற்பை முறியடிக்க பிரதமர் மோடியை குமரிக்கு வரவழைக்க தமிழக பாஜகவினர் திட்டம் மோட்டிருக்கிறார்களாம். தென் மாநிலங்களில் ராகுலின் வருகை ஒரு அலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனை மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என்றால் மோடி ஜி அடிக்கடி இங்கு வர வேண்டும். தென் மாநிலங்களை கவர் செய்வதற்கான திட்டத்தில் மோடி, அமித்ஷாவின் விசிட்டும் முக்கியமாக இருக்க வேண்டும் என டெல்லி தலைமைக்கு மெசேஜ் பாஸ் செய்திருக்கிறார்களாம்.

கன்னியாகுமரி வரும் மோடி?

கன்னியாகுமரி வரும் மோடி?

தமிழக பாஜகவின் கோரிக்கைக்கு டெல்லியும் பச்சைக்கொடி காட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 2ஆம் தேதி பிரதமர் மோடி குமரி வரக்கூடும் எனத் தகவல்கள் பரபரக்கின்றன. காந்தி ஜெயந்தி அன்று குமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் அவரது அஸ்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் சூரிய ஒளி விழும். அன்று பிரதமர் மோடி அங்கு அஞ்சலி செலுத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. ராகுல் தனது பயணத்தை தொடங்கிய இடத்திலேயே மோடி இறங்க இருக்கிறார் என பாஜகவினர் உற்சாகமாக கூறி வருகின்றனர்.

 கணக்கு சேருதே

கணக்கு சேருதே

இதற்கிடையில் தான், மோடியின் பிறந்தநாளான இன்று, 2024ல் பிரதமர் மோடி மதுரையில் போட்டியிடுவதாக போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் பாஜகவினர். பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் பாஜக எளிதாக வளரும், ஆதரவு கூடும் என பாஜகவினர் கணக்குப் போடுகின்றனர். அண்மையில் இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் கூட, மோடி, அமித்ஷா ஆகியோர் கோவை, குமரி அல்லது மதுரையில் தொகுதியில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+