ஆம்னி பேருந்தில் அசிங்கம்..பஸ் டிரைவர் பாக்குற வேலையா இது! பிஸ்கட்டால் வந்த விபரீதம்.. குமுறிய குமரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரியை சேர்ந்த கல்லூரி மாணவி ஆம்னி பேருந்தில் பயணம் செய்தபோது பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். மகள் போல் இருப்பதாக கூறி, நள்ளிரவில் எழுப்பி மயக்க பிஸ்கட் கொடுத்து அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவரின் 21-வயதான மகள்
கோயம்புத்துரில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் கல்லூரியில் எம்எஸ்சி இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பாக விவசாயின் மனைவியும், மகளும் கோயம்புத்தூர் கல்லூரிக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்தில் சென்றுள்ளனர்.
அப்போது தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை அருகே குளப்புறம் பகுதியை சேர்ந்த வல்சலம் என்பவரது மகன் அனீஷ்(36). அந்த ஆம்னி பேருந்தில் ஓட்டுனராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உண்டு.

கன்னியாகுமரி கிரைம்
அவர் தாய் மகள் இருவரிடமும் பாசமாக பேசி எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என கூறி பஸ் நிறுத்தம் இடங்களில் எல்லாம் கேட்ட உதவி செய்துள்ளார். மேலும் அவரின் தாயாரிடம் தயக்கமும் இன்றி கூறுங்கள் அவள் எனது மகளை போன்று இருக்கிறாள் எனக் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தாயாரிடம் நீங்கள் அங்கும் இங்குமாக அலைய வேண்டாம்.நான் கல்லூரிக்கு சென்று வர உதவி செய்கிறேன் என கூறியுள்ளார். இதனை அவர்கள் நம்பி உள்ளனர். இதனால் விடுப்பிற்கு வந்து விட்டு செல்லும் போதும் விடுப்பிற்கு வரும் போதும் அனிஷ் ஓட்டி செல்லும் பேருந்தில் நம்பி செல்லது வழக்கம்.
ஆம்னி பேருந்து ஓட்டுனர்
இந்நிலையில் கடந்த 09.11.2025-ம் தேதி அனீஷ் ஒட்டிய சிட்டி டிராவல்ஸ் பஸ்சில் வீட்டிற்கு வரும் போது ஸ்லீப்பர் பெட்டில் மாணவி தூங்கி கொண்டிருந்த போது வேறு ஒரு ஓட்டுநர் பேருந்து ஓட்டி கொண்டு இருந்தார். அப்போது அனீஷ் மாணவியை தட்டி எழுப்பி பசிக்குதுன்னா இந்த பிஸ்கட்டை சாப்பிடு என கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டதும் மயங்கிய நிலையில், தொடர்ந்து மாணவியை பலாத்காரம் செய்து உள்ளார். மறுதினம் காலையில் நாம் இருவருக்கும் எல்லாம் முடிந்து விட்டது என்று அனீஷ் கூறியுள்ளார்.
மாணவி புகார்
உடனே மாணவி அழுது கொண்டு அம்மாவிடம் இதைப்பற்றி கூறுவேன் என்று சொல்லவே அனீஷ் கத்தியை காட்டி மிரட்டி உன்னையும் குடும்பத்தில் உள்ளவர்களையும் கொன்று விடுவேன் எனவும் நேற்று இரவு நடந்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளேன் எனவும் கூறி மிரட்டியுள்ளார். அதன்பின் பேசுவதற்கு அழைத்து இரண்டு நாட்கள் மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . அதை வீடியோ எடுத்து வைத்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ஓட்டுனர் கைது
இதனால் மாணவியின் உயிருக்கும், அவரது குடும்பத்தினர் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பயணத்தின் போது ஓட்டுனரை நம்பி சென்ற மாணவிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து நம்பிக்கை மோசடி செய்து கழித்து வீடியோ எடுத்து வைத்து கொண்டு கொலை மிரட்டில் விடுத்த அனீஷ் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அனிஷ்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications