கரூரில் 100 அடி சாலையில், புகுந்த 60 அடி விஜய்யின் பஸ்! நெரிசலால் நகர முடியாமல் மக்கள் பலி
கரூர்: கரூரில் 100 அடி சாலையில் 60 அடிக்கு விஜய்யின் பிரச்சார பேருந்து நுழைந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நெரிசலில் சிக்கியவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் பலர் உயிரிழக்க நேரிட்டதாக இந்த விபத்தில் இருந்து மீண்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். விஜய் பிரச்சாரத்தில் வரும் இடங்களில் எல்லாம் சாரை சாரையாக கூட்டம் கூடுகிறது. விமான நிலையத்தில் கூட அத்துமீறி நுழைந்து அவரது வாகனத்தை துரத்திக் கொண்டே ஓடியவர்களையும் கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் பார்த்துள்ளோம்.

அது போல் அவருடைய வாகனம் நகர கூட முடியாத அளவுக்கு முன்பும் பின்பும் கூட்டம் கூடுவதையும் நாம் பார்க்கிறோம். இந்த நிலையில் நாமக்கலில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்தார்.
அவரது பிரச்சாரம் நடந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது திடீரென அடுத்தடுத்து பலர் மயங்கி விழுந்தனர். இதில் ஒருவர் மீது ஒருவர் மயங்கி விழுந்ததால் இதுவரை 33 பேர் பலியாகிவிட்டனர்.
இதில் 6 பச்சிளம் குழந்தைகள், 16 பெண்கள் உள்பட 31 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது போல் மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாமக்கல், சேலம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த துயர சம்பவம் எப்படி நடந்தது என்பதை பார்க்கலாம். கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரத்திற்கு இடம் கொடுத்த இடம் 100 அடி சாலையாம். அந்த சாலையில் 60 அடிக்கு பேருந்து வந்துவிட்டது. இதனால் அங்கிருந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அவர்களால் வெளியேற முடியவில்லை. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர் என சொல்லப்படுகிறது. ஒருவர் மீது மட்டும் 10 பேர் விழுந்து கிடந்ததாகவும் அவர்களை நீக்கிவிட்டு பார்த்த போது அந்த நபர் இறந்து கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தால் கரூர் அரசு மருத்துவமனைகளில் உறவினர்களின் மரண ஓலங்களும் கேட்கின்றன. கரூர் அரசு மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி எம்எல்ஏ விரைந்து சென்று சிகிச்சை அளிக்கும் பணிகளை பார்வையிட்டார். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications