Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் விஜய் பரப்புரை: ஆம்புலன்ஸ் கூட போகாத இடத்தில் அனுமதி! ஆட்சியர், எஸ்பியை சஸ்பெண்ட் பண்ணுங்க.. அண்ணாமலை அட்டாக்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் சம்பவத்தில் 40 அப்பாவி உயிர்களை பறிகொடுத்துள்ளோம் என்று கூறியுள்ள தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, ஆம்புலன்ஸ் கூட போக முடியாத இடத்தில் போலீசார் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள் என்று கூறினார். மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பி இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் 40 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டு உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் வருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து பேசினார்.

karur-vijay-rally-annamalai-demands-suspension-of-collector-sp-for-allowing-event-where-even-ambul

அப்போது அண்ணாமலை பேசியதாவது:- கரூர் சம்பவத்தில் 40 அப்பாவி உயிர்களை பறிகொடுத்துள்ளோம். மருத்துவமனையில் இன்னும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு முன்பு இப்படி நடந்தது கிடையாது, இனியும் இப்படி நடக்கக் கூடாது - அண்ணாமலை

மருத்துவ உதவி தேவைப்பட்டால் பாஜகவினர் செய்வார்கள். எதோ பல தவறுகள், சில குளறுபடிகள் நடந்திருக்கிறது. மக்கள் கூட்டத்தை சரியாக கையாள்கின்றோமா என்று பார்த்தால் இல்லை.. எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது தான். வேலுச்சாமிபுரம் என்பது மிக குறுகலான இடம். அங்கு ஏன் போலீசார் அனுமதி கொடுக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் கூட போக முடியாத இடத்தில் போலீசார் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து அரசு தவறி வருகிறது.. 500 போலீசார் பாதுகாப்புக்கு வந்து இருப்பதாக சொல்கிறார்கள், ஆனால் அங்கு 100 பேர் கூட இல்லை. ஸ்பாட்டில் 100 போலீசார் கூட இல்லை.

மாவட்ட ஆட்சியர், எஸ்பியை முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் பதவியில் இருந்து விலக வேண்டும். விஜய் தான் அக்யூஸ்டு நம்பர் ஒன் என்று நான் சொல்ல மாட்டேன். வீக் எண்ட் அரசியலில் இருந்து விஜய் வெளியே வர வேண்டும். கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+