என்ன ஒரு புத்திசாலித்தனம்.. பிடித்த மீனை உடனே அளக்க.. காலில் ஸ்கேல் டாட்டூ போட்டுக் கொண்ட மீனவர்!
மீனை அளந்து பார்ப்பதற்காக காலில் ஸ்கேல் மாதிரி டாட்டூ வரைந்துள்ளார் மீனவர் ஒருவர்.
லண்டன்: தான் பிடிக்கும் மீன்களின் நீளத்தை அளந்து பார்ப்பதற்கு ஏதுவாக, தனது காலில் அளவுகோல் போன்ற டாட்டூ வரைந்து அசர வைத்திருக்கிறார் மீனவர் ஒருவர்.
நம்மூரில் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம், இன்று உலகமெங்கும் டாட்டூ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்களது மனதிற்கு பிடித்த மாதிரி எழுத்துக்கள், பெயர்கள், உருவங்கள் போன்றவற்றை டாட்டூவாகக் குத்திக் கொள்கின்றனர். இந்த இடம்தான் என்றில்லாமல், அந்தரங்கப் பகுதிகளில்கூட டாட்டூ குத்திக் கொள்ளும் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் டாட்டூக்கள் அழகுக்காக போட்டுக் கொள்ளப்படும் நிலையில், அதை உபயோகமானதாகவும் போட்டுக் கொள்ள முடியும் என நிரூபித்துள்ளார் மீனவர் ஒருவர்.

டிக்டாக் வீடியோ
சம்பந்தப்பட்ட அந்த புத்திசாலி மீனவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்தியாவில் வாழ்பவராக மட்டும் இருக்க முடியாது. ஏனென்றால், இந்த வீடியோ டிக்டாக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்தியாவில்தான் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதே. எனவே இவர் நிச்சயம் டிக்டாக்கிற்கு அனுமதி தரும் ஏதோ நாட்டைச் சேர்ந்தவர்தான்.

இதுதான் காரணம்
இவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது வலது காலில் அளவுகோலை (அட, அதாங்க ஸ்கேல்..) டாட்டூவாக வரைந்து கொண்டுள்ளார். கணுக்காலில் இருந்து தொடைப்பகுதி வரை, அளவுகோலில் இருப்பது மாதிரி, சிறுகோடுகளுடன் எண்களையும் சேர்த்து இவர் டாட்டூ போட்டுள்ளார். இவர் இப்படி வித்தியாசமாக டாட்டூ போட்டதுகூட பெரிய விசயமல்ல.. என்ன காரணத்திற்காக இந்த டாட்டூவை அவர் போட்டுக் கொண்டுள்ளார் எனத் தெரிந்து கொண்டால் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.

மீனை அளக்க டாட்டூ
அதாவது மீனவரான இவர், தான் பிடிக்கும் மீன்களின் நீளத்தை உடனுக்குடன் அளந்து பார்ப்பதற்காக இப்படி ஒரு ஸ்கேலை காலில் வரைந்து கொண்டுள்ளார். சாதாரண பேனாவில் வரைந்தால் அழிந்து போய்விடும் என்பதால், காலத்திற்கும் அழியாதபடி டாட்டூவாக வரைந்துள்ளார். அந்த வீடியோவில் மீன் ஒன்றை வைத்து, அதன் அளவையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல யோசனை
ரூம் போட்டு யோசித்தால்கூட என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத டாட்டூக்கள் இங்கு அதிகம். ஆனால், தனக்கு என்ன தேவையோ அதை புத்திசாலித்தனமாகச் சிந்தித்து, இப்படி டாட்டூவாக வரைந்திருக்கும் அந்நபரின் புத்திசாலித்தனத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும். இவரது டாட்டூ புகைப்படத்தைப் பகிர்ந்து, 'என்ன ஒரு புத்திசாலித்தனம்' என நெட்டிசன்களும் இவரைப் பாராட்டி கமெண்ட்களை வெளியிட்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications