பிளாஷ்பேக்: சார்லஸுக்கு மன்னராகும் தகுதியில்லை.. மரணத்துக்கு முன் அரச குடும்பத்தை அதிர வைத்த ‘டயானா’
லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாவது எலிசபெத் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில், மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா, தற்போதைய மன்னர் மூன்றாம் சார்லசுக்கு மன்னராகும் தகுதியே இல்லை என்று கூறியது தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
பிரிட்டன் ராணி 2 வது எலிசபெத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எலிசபெத் ராணி கடந்த 8 ஆம் தேதி லண்டனில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
எலிசபெத் மரணத்தை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் நேற்று முந்தினம் பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். எலிசபெத் மரணத்தை தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்க இது தொடர்பான செய்திகளே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளன.

இளவரசி டயானா
சார்லஸ் மன்னராக முடிசூட்டிக் கொண்ட இந்த நேரத்தில் பிரிட்டன் இளவரசி டயானாவை பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். ஆசிரியையாக இருந்து மன்னர் குடும்பத்து இளவரசியான டயானாவின் மரணம் இன்றும் உலகவில் மர்ம முடிச்சாகவே உள்ளது. டயானா உயிரோடு இருந்திருந்தால் இன்று அவர் இங்கிலாந்து ராணியாகி இருப்பார்.

மர்ம மரணம்
கடந்த 1997 ஆம் ஆண்டு டயானா ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இதன் காரணமாகவே சார்லஸின் இரண்டாவது மனைவி கமீலா தற்போது பிரிட்டன் ராணியாக பதவியேற்று இருக்கிறார். கமீலா உடனான உறவால் டயானாவுக்கும் அவரது சார்லஸுக்கும் இடையே திருமண உறவு சுமூகமாக இல்லை என்றும், அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு டயானா இளவரசியானதில் விருப்பமில்லை என்றும் கூறப்பட்டது.

டயானா பேட்டி
பிபிசி தொலைக்காட்சியில் பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர் எடுத்த நேர்காணலில் கலந்துகொண்ட இளவரசி டயானாவிடம், "மகாராணி எலிசபெத்துக்கு பிறகு இளவரசர் சார்லஸுக்கு பதிலாக இளவரசர் வில்லியமுக்கு மன்னர் பதவி கிடைத்தால் சரியாக இருக்குமா?" என்று கேள்வி எழுப்பினார். தொடக்கத்தில் அதற்கு பதிலளிக்க மறுத்த டயானா, பின்னர் "ஆம்" என்று கூறியதால் அரச குடும்பமே அதிர்ந்துபோனது.

உதவியாளர் பேட்டி
இளவரசி டயானாவுக்கு உணவு பரிமாறுபவராக இருந்த பால் புர்ரேல் என்பவரிடம் அவர், என்னுடைய கணவர் சார்லஸுக்கு மன்னராவதற்கான தகுதி இல்லை என்று கூறி உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு பால் புர்ரேல் அளித்த பேட்டியில், "இங்கிலாந்து மன்னராக சார்லசும், ராணியாக கமீலாவும் அமர்வதை நாம் காணமாட்டோம் என நினைக்கிறேன்." என்று கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications