முதல் உயிரை குடித்த ஓமிக்ரான் வைரஸ்.. நார்வே நாட்டில் தீவிர கட்டுப்பாடுகள்.. பீதியில் உலக நாடுகள்!
லண்டன்: உலக நாடுகள் பல்வேறு வகையில் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வந்தாலும் உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் டெல்டா வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் ஒருவர் பலி
இங்கிலாந்திலும் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் 3,000- வரையில் உள்ளது. அங்கு பாதிப்பு தினமும் இரண்டு, மூன்று மடங்கு அதிவேகமாக செல்கிறது. கடந்த சனிக்கிழமை 1,898 ஆக இருந்த ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு நேற்று முன்தினம் மட்டும் 1200-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின.

நார்வேயில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
மேலும் இங்கிலாந்தில் ஓமிக்ரான் வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்து விட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தில் ஓமிக்ரான் வைரசால் நிகழும் முதல் உயிரிழப்பு இதுவாகும். ஓமிக்ரான் உயிரை குடித்து விட்டதால் உலக நாடுகள் அனைத்தும் கலக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் நார்வே நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் நார்வே நாட்டில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தினமும் 3,000 முதல் 4,000 வரையிலான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

நோயாளிகள் அதிகரிப்பு
இதனால் அங்கு பொது இடங்களில் மக்களுக்கு அதிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் நார்வேயில் ஓமிக்ரான் பாதிப்புகள் அதிமாக இருக்கலாம் என்று அந்த நாட்டின் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நார்வேயில் உள்ள மருத்துவமனைகளில் வைரஸ் பாதிப்பு உள்ள நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இதனால் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணி செய்து வருகின்றனர்.

பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை
நாட்டின் நிலைமை தொடர்ந்து மோசமாகி கொண்டு போகிறது. ஓமிக்ரான் வைரஸ் மட்டுமில்லாது கொரோனா வைரசும் கூடவே சேர்ந்து அதிகமாகி கொண்டே செல்கிறது. மக்கள் நடமாட்டத்துக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசுக்கு அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications