லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆசையாக.. முதன்முறையாக ராக்கெட் அனுப்பிய பிரிட்டன்.. கடைசி நொடியில்.. கண் கலங்கிய விஞ்ஞானிகள்!

Google Oneindia Tamil News

லண்டன்: வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டன் மண்ணில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்ட ராக்கெட் கடைசி நொடியில் தோல்வி அடைந்தது அந்நாட்டு மக்களையும், விஞ்ஞானிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யாக.. முதன்முறையா

திட்டமிட்டப்படி சரியான இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்த ராக்கெட், திடீரென தனது பாதையில் இருந்து விலகியது ஏன் என்று தெரியாமல் பிரிட்டன் விஞ்ஞானிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த தோல்வியின் மூலம் தங்கள் மண்ணில் இருந்து விண்ணுக்கு ராக்கெட் அனுப்ப வேண்டும் என்ற பிரிட்டன் மக்களின் நீண்டநாள் கனவு நொறுங்கியுள்ளது.

 சென்னை மக்களே..! அடையாறு மேம்பாலம் உட்பட இரு முக்கிய மேம்பாலங்கள் இடிப்பு! எதற்கு தெரியுமா சென்னை மக்களே..! அடையாறு மேம்பாலம் உட்பட இரு முக்கிய மேம்பாலங்கள் இடிப்பு! எதற்கு தெரியுமா

விண்வெளித்துறையில் பின்தங்கும் பிரிட்டன்

விண்வெளித்துறையில் பின்தங்கும் பிரிட்டன்

ஒருகாலத்தில் உலகையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததால் 'சூரியன் மறையாத நாடு' என அழைக்கப்பட்ட நாடு பிரிட்டன். தற்போது உலக வல்லரசுகளில் ஒன்றாக இருந்தாலும், அந்நாடுகளை ஒப்பிடும் போது விண்வெளித் துறையில் பின்தங்கிய நிலையில்தான் பிரிட்டன் இருக்கிறது. குறிப்பாக, பிரிட்டன் இருந்து நேரடியாக இதுவரை விண்ணுக்கு ராக்கெட் செலுத்தப்படவில்லை. பிரிட்டனில் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள்கள் வெளிநாடுகளின் மூலமாகவே விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

களங்கத்தை போக்க..

களங்கத்தை போக்க..

இந்நிலையில், இந்தக் களங்கத்தை போக்குவதற்காக பிரிட்டனில் இருந்து நேரடியாக விண்ணுக்கு ராக்கெட் செலுத்தும் நடவடிக்கையில் கடந்த சில ஆண்டுகளாக பிரிட்டன் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். அதன்படி, 70 அடி உயர லாஞ்சர் ஒன் ராக்கெட்டை விஞ்ஞானிகள் உருவாக்கினர். பின்னர் போயிங் 747 விமானத்தில் அந்த ராக்கெட் பொருத்தப்பட்டது. ராக்கெட்டில் 9 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டிருந்தன.

விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்

விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்

இதனைத் தொடர்ந்து, பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் உள்ள விண்வெளி தளத்தில் ராக்கெட் வைக்கப்பட்ட விமானம் நேற்று புறப்பட்டது. பின்னர், திட்டமிட்டபடி அயர்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் பெருங்கடலில் 35 ஆயிரம் அடிக்கு உயரத்தில் விமானம் சென்றபோது, அதில் இருந்த ராக்கெட் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் செல்லும் பாதையை விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வந்தனர்.

கடைசி நொடியில் தோல்வி

கடைசி நொடியில் தோல்வி

அப்போது ராக்கெட் சரியான பாதையில், பூமியின் சுற்றுவட்டப் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தது. பின்னர் சுற்றுவட்டப் பாதைக்கு மிக அருகே ராக்கெட் சென்றது. இதனால் உற்சாகமிகுதியில் ராக்கெட் வெற்றிகரமாக பூமி சுற்றுவட்டப் பாதையை அடைந்ததாக விஞ்ஞானிகள் ட்வீட் போட்டனர். இதனால் பிரிட்டன் மக்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். ஆனால், கடைசி சில நொடிகளில் ராக்கெட் திடீரென திசைமாறி புவி சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகிச் சென்றது. இதனால் இந்த ராக்கெட் தோல்வி அடைந்ததாக பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். என்ன காரணத்தால் ராக்கெட் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகியது என தெரியாமல் பிரிட்டன் விஞ்ஞானிகள் குழப்பத்தில் உள்ளனர்.

English summary
The failure of a rocket launched from England soil for the first time in history has left the country's people and scientists sad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X