’7 பேர்’ துப்பாக்கி முனையில் கொடூரம்! புல் அறுக்க சென்ற பெண்ணை சீரழித்த கும்பல்! அதிர்ந்த போலீஸ்!
லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் தான் வளர்க்கும் மாடுகளுக்கு புல்லருக்க சென்ற தலித் பெண்ணை துப்பாக்கி முனையில் ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 4 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என கூறப்படுகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

உபியில் அதிர்ச்சி
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் தான் வளர்க்கும் மாடுகளுக்கு புல்லருக்க சென்ற தலிப் பெண்ணை துப்பாக்கி முனையில் ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மாநில முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளதோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
முசாபர் நகர் மாவட்டம் கோட்வாலி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான இளம் பெண் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளிக்கு தான் வளர்க்கும் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த ஆண் நண்பருடன் அவர் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

துப்பாக்கி முனையில் மிரட்டல்
இந்நிலையில் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அங்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளனர். மேலும் அவரது ஆண் நண்பரை கொடூரமாக தாக்கி அங்கிருந்து விரட்டி அடித்ததோடு தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். மேலும் அவரது ஆடைகளை அகற்றுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டி ஏழு பேரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

7 பேர் கைது
அதுமட்டுமின்றி இந்த கொடூர செயலை அவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அந்த இளம் பெண் கிராமத்திற்குள் வந்து தனக்கு நேர்ந்த கொடுரம் குறித்து தங்களது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான அவர்கள் இது குறித்து முஸாபஹா நகர் காவல் துறையினர் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இளம் பெண்ணுக்கு துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை கொடுத்த ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications