ஓவைசி கட்சியுடன் கூட்டணி இல்லை- உ.பி, உத்தரகாண்ட் தேர்தல்களில் பி.எஸ்.பி. தனித்தே போட்டி.. மாயாவதி
லக்னோ: உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் ஓவையின் மஜ்லிஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது; பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அதன் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே பணிகளை தொடங்கிவிட்டன.

100 இடங்களில் ஓவைசி கட்சி போட்டி
உத்தரப்பிரதேசத்தில் 100 இடங்களில் போட்டியிடுவோம் என்று ஓவைசியின் மஜ்லிஸ்ட் கட்சி அறிவித்தது. பீகாரில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கட்சிக்கு செல்ல வேண்டிய சிறுபான்மை வாக்குகளை பிரித்து ஆட்சி அமைக்க விடாமல் தடுத்ததால் உத்தரப்பிரதேச அரசியலிலும் பெரும் எதிர்பார்ப்பை ஓவைசி கட்சி ஏற்படுத்தி இருக்கிறது.

ஓவைசி கட்சி- பிஎஸ்பி கூட்டணியா?
மேலும் ஓவைசி கட்சியுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து உத்தரப்பிரதேச தேர்தலை எதிர்கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. பஞ்சாப் மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கு சிரோமணி அகாலிதளத்துடன் பகுஜன் சமாஜ் கூட்டணி வைத்த நிலையில் இந்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஓவைசி கட்சியுடன் கூட்டணி இல்லை
ஆனால் இதனை மாயாவதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் மாயாவதி விளக்கம் அளித்துள்ளார். அதில், ஓவைசி கட்சியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைக்க உள்ளதாக நேற்று முதல் ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது முற்றிலும் பொய்யான செய்தி. இதனை பகுஜன் சமாஜ் கட்சி மறுக்கிறது.

உ.பி., உத்தரகாண்ட்டில் தனித்தே போட்டி
அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உ.பி.க்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பஞ்சாப் மாநில தேர்தலை தவிர்த்து உத்தரகாண்ட், உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்; எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்றும் மாயாவதி அந்த ட்விட்டர் பதிவில் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நெருக்கடியில் மாயாவதி
அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக, சமாஜ்வாதி கட்சிகளுக்கு அடுத்ததாக பகுஜன் சமாஜ் கட்சிக்க் 3-வது இடம்தான் கிடைத்திருந்தது. அத்துடன் உ.பி. பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் மாயாவதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி சமாஜ்வாதி கட்சியில் இணையவும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications