காவியில் கவர்ச்சி ஆட்டமா? தியேட்டர், படக்குழுவை எரிங்க! ஷாரூக் படத்துக்கு அயோத்தி சாமியார் எதிர்ப்பு
லக்னோ: நடிகர் ஷாரூக் கான் நடித்து உள்ள பதான் திரைப்படத்தின் பேஷரம் ரங் பாடலில் தீபிகா படுகோனே காவி உடையில் அணிந்து இருப்பதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதை திரையிடும் திரையரங்குகளை தீ வைத்து எரிக்க வேண்டும் என அயோத்தி ஹனுமன் கார் மடத்தின் மத குரு ராஜு தாஸ் தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் தீபிகா படுகோனே இணைந்து நடித்து இருக்கும் திரைப்படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு விஷால் - சேகர் இசையமைத்து இருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சல்மான் கான், ரித்திக் ரோஷன்
இதில் ஜான் ஆப்ரஹாம், அசுதோஷ் ரானா, கௌதம் ரோட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். குறிப்பாக பிரபல பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளார்கள். இந்த படம் தொடர்பான விளம்பர பணிகள் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பேஷாராம் ராங் பாடல்
இந்த நிலையில் கடந்த 12 ஆம் ஆம் தேதி இந்த திரைப்படத்தின், "பேஷாராம் ராங்" என்ற முதல் பாடல் வெளியானது. தமிழில் "அழகிய மழை" என்ற பெயரில் வெளியான இந்த பாடலுக்கு மதன் கார்கி வரிகளை எழுதி உள்ளார். இதில் ஷாரூக் கான், தீபிகா படுகோனே நடனமாடும் காட்சிதான் இந்துத்துவா அமைப்பினரை கொந்தளிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

காவி உடையில் தீபிகா படுகோனே
இந்த பாடலில் நடனமாடும் தீபிகா, காவி நிறத்திலான உடையை அணிந்து உள்ளதற்கு இந்துத்துவா அமைப்பினரும் பாஜகவினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பதான் திரைப்படம் ஓடும் திரையரங்குகளை தீ வைத்து கொளுத்துங்கள் என அயோத்தி ஹனுமன் கார் மடத்தின் மத குரு ராஜு தாஸ் தெரிவித்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்து இருக்கிறது.

அயோத்தி மதகுரு
இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்து உள்ளதாவது, "பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து சனாதன தர்மம் கேலி செய்யப்பட்டு வருவது வழக்கமானதாக உள்ளது. இந்து கடவுள்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகின்றன. தீபிகா படுகோனே பதான் திரைப்படத்தில் அணிந்து இருக்கும் பிகினியின் நிறம் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது.

ஷாரூக் கான் மீது விமர்சனம்
குறிப்பாக நடிகர் ஷாரூக் கான் சனாதன தர்மத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினியை அணிய வேண்டிய தேவை என்ன? மத உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே இதுபோன்ற திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தீ வைத்து கொளுத்த வேண்டும்
எந்தெந்த திரையரங்குகளில் எல்லாம் இந்த பதான் திரைப்படம் திரையிடப்பட உள்ளதோ, அதையெல்லாம் தீ வைத்து எரிக்க வேண்டும். இப்படத்தை எடுத்தவர்களுக்கு இதே தண்டனை கொடுக்க வேண்டும்." என்று கூறினார். அயோத்தி ஹனுமன் கார் மடத்தின் மத குரு ராஜு தாஸின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications