உ.பி.யில் பாஜகவுக்கு கடும் பின்னடைவா? 2017 தேர்தலை ஒப்பிடுகையில் சுமார் 100 தொகுதிகளை பறிகொடுக்கும்?
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்பதுதான் பொதுவாக எக்ஸிட் போல் தெரிவிக்கும் முடிவுகள். ஆனால் 2017 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக சுமார் 100 தொகுதிகள் வரை பறிகொடுத்துதான் ஆட்சியை தக்க வைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதையும் இந்த எக்ஸிட் போல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு மொத்தம் 202 இடங்கள் தேவை. 2017 சட்டசபை தேர்தலில் 384 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 312 இடங்களில் வென்றது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி இமாலய வெற்றியை சூட்டிக் கொண்டது பாஜக.

யோகி ஆதித்யநாத் அரசு
மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அதாவது பெரும்பான்மைக்கு தேவையானதை விட 100 தொகுதிகளைக் கூடுதலாக பெற்று அரியாசனத்தில் பாஜக அமர்ந்தது. முதல்வராக தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சைகள், வன்முறைகள், போராட்டங்கள் என எதிர்கொண்டது உ.பி. பாஜக அரசு. உ.பி.யில் ஜாதிய அரசியலை சமன் செய்வதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது என்பது பாஜகவின் மேலிட விருப்பமாக இருந்தது. ஆனால் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., யோகி ஆதித்யநாத்தை அப்படி ஒன்றும் எளிதாக விட்டுக் கொடுப்பதாக இல்லை. இதனால் அரியாசனத்தில் இருந்து யோகி ஆதித்யநாத்தை அகற்ற முடியவில்லை.

100 சீட் காலி
இப்படி கடும் அதிருப்திகளை எதிர்கொண்டதாலேயே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும் என்னதான் உ.பி.யில் பாஜக ஆட்சியை தக்க வைத்தாலும் 2017 தேர்தலில் வென்ற தொகுதிகளில் 100 இடங்களை இம்முறை இழக்கும் என்று ஆரூடம் தெரிவித்தன. தற்போதைய எக்ஸிட் போல் முடிவுகளும் கூட இதனையே வெளிப்படுத்தி இருக்கின்றன.

எக்ஸிட் போல் முடிவுகள்
இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜகவுக்கு 288-326 இடங்கள் கிடைக்கும் என கணித்திருக்கின்றன. ஆனால் இதர 9 நிறுவனங்களின் எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு இம்முறை அவ்வளவு இடங்கள் கிடைக்காது.. சுமார் 100 தொகுதிகளை பாஜக இழக்கும் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றன. அதிலும் இந்தியா டிவி கிரவுண்ட் ஜீரோ ரிசர்ச் நிறுவனமானது பாஜகவுக்கு 182-220 இடங்கள் என ஜஸ்ட் பெரும்பான்மைதான் கிடைக்கும் என்கிறது.

நிலைமை இதுதான்
உ.பி.யில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை தெரிவித்த கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்: ஏபிசி நியூஸ்- சிவோட்டர் 228-244; இடிஜி ரிசர்ச் 230-245; இந்தியா நியூஸ் 222-260; இந்தியா டிவி 240-250; நியூஸ்24 294; நியூஸ் எக்ஸ் 211-225; ரிபப்ளிக் பி மார்க் 240; டைம்ஸ் நவ் 225; டிவி9 மராத்தி 211-225; ஜி நியூஸ் 223-248. ஆக என்னதான் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்து உ.பி.யில் ஆட்சியை தக்க வைத்தாலும் அது தனது பலத்தை பறிகொடுக்கிறது என்பதுதான் வெளிப்படையாக தெரிகிறது. ஆகையால் பாஜக பெரும் மகிழ்வோடு கொண்டாடக் கூடிய வெற்றி அல்ல.. 2024 லோக்சபா தேர்தலுக்கான எச்சரிக்கை மணியாகவே இதனை பாஜக பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications