கொரோனா டைம்ல ஹெல்ப் பண்ணியிருக்கோம், மதம் மாறுங்க! சாமி படங்களை தூக்கி வீசி கிறிஸ்தவ சபையினர் தகராறு
லக்னோ: கொரோனா காலத்தில் உதவியதால் மதம் மாற வேண்டும் எனக் கூறி மீரட்டில் சிலர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் யார் ஒவ்வொருவருக்கும் எந்தவொரு மதத்தைப் பின்பற்றவும் பரப்பவும் உரிமை இருக்கிறது. ஆனால், யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வைக்க முடியாது.
இதற்காக சில மாநிலங்களில் பிரத்தியேக சட்டங்களும் உள்ளன. இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் நடந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.

உத்தரப்பிரதேசம்
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்குச் சிலரைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்ற முயன்றதாக 3 பெண்கள் உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் உதவியதால் இப்போது மதமாற வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், இதைப் போலீசில் கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

புகார்
இது தொடர்பாக மூத்த காவல் கண்காணிப்பாளர் ரோஹித் சிங் சஜ்வான் கூறுகையில், "கட்டாய மதமாற்றம் தொடர்பாகச் சிலர் புகார் அளித்தனர். அதன்படியே நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து மூன்று பெண்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். விரைவில் இதில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

நடவடிக்கை
மொத்தம் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 3 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து உள்ளனர். மற்றவர்களையும் விரைவில் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா காலம்
கொரோனா காலத்தில் இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எதிர்பாராத விதமாக இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். அப்படித்தான் மீரட் அருகேயுள்ள மங்கடாபுரம் காலனியில் வசிப்பவர்களுக்குச் சிலர் கொரோனா காலத்தில் உதவியுள்ளனர். மேலும், வாரம் ஒரு முறை தேவாலயம் சென்றால் நல்லது நடக்கும் என்றும் கூறி ஊக்குவித்து உள்ளனர்.

இந்து தெய்வங்களின் படங்கள்
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அவர்கள் உணவு மற்றும் நிதி உதவி அளித்துள்ளனர், இதையடுத்து ஒரு கட்டத்திற்குப் பின் அவர்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிலர் கூறுகையில், "இத்துடன் கூட அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. இங்கு வீடுகளில் உள்ள இந்து கடவுளின் படங்களை அவர்கள் எடுத்து வெளியே வீசினர்.

கொலை மிரட்டல்
இதற்கு நாங்கள் எங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கத்திகள் மற்றும் தடிகளுடன் வீட்டிற்கு வந்தனர். இதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தாலோ அல்லது போலீசாரில் புகார் அளித்தாலோ கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினர். நாங்கள் அச்சத்தில் உள்ளோம். இந்த விவகாரத்தில் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கும் உதவ வேண்டும்" என்றார்.

பாஜக தலைவர்
இதேபோல மிரட்டி சுமார் 100க்கும் மேற்பட்டோரைக் கிறிஸ்தவர்களாக மாற்றியுள்ளதாக உள்ளூர் பாஜக தலைவர் தீபக் சர்மா தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கொரோனா காலத்தில் கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் எனக் கூறி மதம் மாற்றத்தில் ஈடுபட்டு உள்ளனர்" என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications