''700 கலவரம் நடந்த இடத்தில் இப்போ ஒரு கலவரம் கூட நடக்கவில்லை'' - உபி பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத்
லக்னோ: சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி நடத்தியபோது ஏகப்பட்ட கலவரங்கள் நடந்தது. தற்போது எந்த கலவரமும் இல்லாமல் அமைதியாக இருப்பதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் 6 ஆம் கட்ட தேர்தல் வரும் 3ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

யோகி ஆதித்யநாத்
மீதமிருக்கும் வாக்குப்பதிவுக்காக உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சித்தார்த்நகரில் நடந்த பிரசாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது, ''உத்தரப்பிரதேசத்தில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு முன் ஆட்சி செய்த பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் வளர்ச்சியை மட்டுமே பார்த்தது. ஆனால் பாஜக ஒட்டுமொத்த மக்கள் வளர்ச்சியைப் பார்க்கிறது.

கலவரம்
உத்தரப்பிரதேசத்தில் 2017க்கு முன் பல கலவரங்கள் நடந்துள்ளன. சமாஜ்வாதி மட்டுமே 700க்கும் அதிகமான கலவரங்களை செய்துள்ளது. அதேபோல் பகுஜன் சமாஜ் மாநிலம் முழுவதும் 300க்கும் அதிகமான கலவரங்களை செய்துள்ளது. ஆனால், 2017க்கு பிறகு பாஜக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்த பிறகு ஒரு இடத்திலும் கலவரம் நடக்கவில்லை. எந்த ஒரு இடத்திலும் போராட்டங்களும் நடக்கவில்லை'' என்று தெரிவித்தார்.

தீவிரவாதம்
உபி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ''சமாஜ்வாதி கட்சி தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. பாஜக வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது. பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. சிலிண்டர் எல்லாருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது'' என்று தெரிவித்தார்.

தாக்குதல்
அதேபோல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிகையில், ''இந்தியா ஒருபோதும் பாரத மாதாவை தலை குனியவைத்ததில்லை. நாமாக போய் யாரையும் தாக்குதல் நடத்தவில்லை. அதேநேரம் போர் என்று வரும்போது எல்லை தாண்டி போகவும் தெரியும், எல்லை தாண்டி தாக்குதல் நடத்தவும் முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications