பார்க்க மனைவி மாதிரியே இருக்கே! ஆணுடன் பைக்கில் போன பெண்! மடக்கிய கணவன்.. மாஸ்க்கை திறந்தால்.. "ஓஹோ"
லக்னோ: உத்தர பிரதேசத்தில் தன் மனைவி போலவே இருந்த பெண் ஒருவர் வேறு ஒரு ஆணின் பைக்கில் சென்றதை பார்த்த கணவர் அந்த பைக் ஓட்டிய நபருடன் சண்டைக்கு போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள கைலாஷ் மந்திர் நெடுஞ்சாலை பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த கணவன் மனைவியின் பெயர் வெளியாகவில்லை.
அந்த கணவன் தொழில் அதிபர் என்று கூறப்படுகிறது. அவருக்கும் அந்த பெண்ணுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

சந்தோஷம்
தொடக்கத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தவர்கள் கடந்த சில மாதங்களாக சண்டை அதிகம் போட்டுள்ளனர். கொரோனா காலத்தில் அந்த தொழிலதிபருக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவும் இவர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட காரணமாக அமைந்து உள்ளது. அவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர்களுக்கு இடையில் மோசமான சண்டை வந்துள்ளது.

சண்டை
சண்டையோடு கணவன் உறங்க போய் உள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது மனைவி வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. அவர் வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவன் மனைவியை பல இடங்களில் தேடி உள்ளார். அவரின் அம்மா வீடு, நண்பர்கள் வீடுகள் என்று பல இடங்களில் தேடி உள்ளார். ஆனால் எங்கேயும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

என்ன நடந்தது?
இந்த நிலையில் கைலாஷ் மந்திர் நெடுஞ்சாலை பகுதியில் கணவர் சென்று கொண்டு இருக்கையில் முன்னால் சென்ற ஆணின் பைக்கில் இருந்த பெண் ஒருவர் பார்க்க தன் மனைவி மாதிரியே இருந்ததும், இவர் பைக்கை துரத்தி சென்றுள்ளார். இதனால் பைக்கை வேகமாக துரத்தி சென்று.. ஏ நிறுத்து நிறுத்து என்று கூறி பைக்கை மடக்கி பிடித்து உள்ளார். பின்னால் இருந்த பெண் ஷாலை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு இருந்துள்ளார்.

ஷால்
ஷாலை மாஸ்க் போல அந்த பெண் அணிந்து இருந்தார். இதையடுத்து அதை நீக்க சொல்லி அங்கேயே கணவன் சண்டை போட்டார். இதை அடுத்து அந்த பெண் மாஸ்க்கை திறந்து பார்த்தார். பைக்கில் போனது தன் மனைவிதான் என்று அவருக்கு தெரிய வந்துள்ளது. என்னை விட்டுவிட்டு எங்கே போனாய்.. எங்க தங்கி இருக்கிறாய் என்று கேட்டு அந்த கணவர் அங்கேயே சண்டை போட்டதால் அங்கே கூட்டம் கூடி பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications