மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மரத்தடியில்" சோகத்துடன் ஓபிஎஸ்.. கிட்ட நெருங்கி சென்ற 2 திமுக அமைச்சர்கள்.. "சம்பவம்" மதுரையில்..!

மதுரையில் ஓபிஎஸ், அமைச்சர் தங்கம் தென்னரசு இருவரும் சந்தித்து கொண்டனர்

Google Oneindia Tamil News

மதுரை: மரத்தடியில் சோகத்துடன் ஓபிஎஸ் உட்கார்ந்திருந்தபோது, அங்கே திடீரென வந்தார்கள் திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரனும்.. அதற்கு பிறகுதான் இந்த நிகழ்வு நடந்தது.

காஷ்மீரில் உள்ள ராஜௌரி மாவட்டத்திற்கு அருகே இந்திய ராணுவ முகாமிற்குள் 2 பயங்கரவாதிகள் திடீரென புகுந்து , தற்கொலை படை தாக்குதலை நடத்தினர்.

இதில் முகாமிற்குள் நுழைந்த 2 பயங்கரவாதிகளும் உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.. தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

3 ட்விஸ்டுகள்.. 4 பூதங்கள்.. அதிமுக வழக்கில் ஓபிஎஸ் தோற்றால் என்ன நடக்கும் தெரியுமா? பரபர பின்னணி 3 ட்விஸ்டுகள்.. 4 பூதங்கள்.. அதிமுக வழக்கில் ஓபிஎஸ் தோற்றால் என்ன நடக்கும் தெரியுமா? பரபர பின்னணி

 தும்மக்குண்டு

தும்மக்குண்டு

இதில், ஒருவர் நம் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன்.. மதுரை மாவட்டம்‌ திருமங்கலம் அருகே தும்மக்குண்டை அடுத்த டி. புதுபட்டியைச் சேர்ந்தவர்.. கடந்த 2019-லேயே ராணுவத்தில் சேர்ந்துவிட்டவர்.. இவரது மரணம் தமிழகத்தை உலுக்கி எடுத்துள்ளது.. தகவலை அறிந்து தும்மக்குண்டு பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.. லட்சுமணன் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.. லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பிடிஆர், மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பேனர்கள்

பேனர்கள்

உறவினர்களும், குடும்பத்தினரும், ஊர் மக்களும் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.. அவரது ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், லட்சுமணனுக்கு கண்ணீர் அஞ்சலி பேனரையும் வைத்திருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, "பதிலடி கொடுக்க காத்திருக்கும் வருங்கால ராணுவ வீரர்கள்" என்ற வாசகமும் அந்த பேனருக்கு கீழே அவர்கள் எழுதி வைத்துள்ளனர்.. இந்த பேனர் சோஷியல் மீடியா முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த பேனரை பார்த்த இணையவாசிகள், தங்கள் ஆதரவையும், லட்சுமணனுக்கு வீர மரண அஞ்சலியையும் பதிவிட்டு வருகின்றனர்.

மரத்தடி

மரத்தடி

இதனிடையே இன்னொரு நெகிழ்ச்சி சம்பவமும் லட்சுமணன் கிராமத்தில் நடந்தது.. வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு இறுதி மரியாதை செலுத்த, ஓபிஎஸ் அங்கு தன்னுடைய ஆதரவாளர்களுடடன் வந்திருந்தார்.. அங்கு வைக்கப்பட்டிருந்த லட்சுமணனின் உடலுக்கு இரு கைகளையும் கூப்பி அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்த குடும்பத்தினரிடம் ஆறுதல் வார்த்தைகள் சொன்னார்.. பிறகு, அதே கிராமத்தை சேர்ந்த நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டே மெல்ல நடந்து வந்து, அருகில் இருந்த ஒரு மரத்தடியில் வந்து சோகத்துடன் உட்கார்ந்து கொண்டார்.. ஓபிஎஸ் உட்கார்ந்ததுமே, அவருக்கு பக்கத்தில் சில நிர்வாகிகளும் உட்கார்ந்தனர்.

 மரத்தடியில் ஓபிஎஸ்

மரத்தடியில் ஓபிஎஸ்

இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரனும் வந்தனர். இவர்கள் வரும் வழியில் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர்.. பிறகு, நடந்து வரும்போதுதான், அங்கே ஓபிஎஸ் மரத்தடியில் உட்கார்ந்திருப்பது தங்கத்துக்கு தெரியவந்தது.. ஆனால், அவருடன் வந்துகொண்டிருந்த கேகேஎஸ்ஆருக்கு தெரியவில்லை.. பிறகு, அவரது கையைப்பிடித்து இழுத்து, ஓபிஎஸ் அங்கிருப்பதாக சொல்லி, அழைத்து சென்றார்.. மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஓபிஎஸ்ஸும் டக்கென எழுந்து நின்றார்..

பரஸ்பரம்

பரஸ்பரம்

இரு தரப்பிலுமே பரஸ்பர வணக்கங்களை தெரிவித்து கொண்டனர்... தங்கம் தென்னரசு டக்கென ஓபிஎஸ் கையை பிடித்தபடி சிறிது நேரம் பேசினார்.. இரு தரப்பு கட்சி நிர்வாகிகளுமே இதை அமைதியாக பார்த்து கொண்டு நின்றனர்... இந்த நாட்டுக்காக, நம் தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் வீர மரணமானது, அனைத்து விதமான பேதங்களையும் சுக்குநூறாக நொறுக்கிவிட்டு, இணக்கத்தை அனைவரிடமும் இழையோடிவிட்டது நெகிழ்ச்சியை கூட்டி வருகிறது.. அத்துடன் வேறு வேறு கட்சியை சேர்ந்த நேரெதிர் துருவங்களே என்றாலும், அரசியல் நாகரீகம் நம் தமிழகத்தில் என்றுமே தலைநிமிர்ந்து நிற்கிறது என்பதற்கு இது ஒரு கூடுதல் உதாரணம் ஆகும்.

English summary
big incident in madurai and ops talked with dmk ministers thangam thennarasu, kkssr ramachandran மதுரையில் ஓபிஎஸ், அமைச்சர் தங்கம் தென்னரசு இருவரும் சந்தித்து கொண்டனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X