“அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு தகுதியில்லை” - வரிந்து கட்டி வந்த நயினார் நாகேந்திரன்!
மதுரை: "அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு தகுதியில்லை. இன்னும் விசில் அடித்துக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது." என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சியான அதிமுகவை விஜய் விமர்சித்த நிலையில் காட்டமாக பதில் கொடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.
மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2-வது தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதிநடைபெறுகிறது. இதற்காக மதுரை மண்டேலா நகரில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கடந்த தேர்தலில் 525 வாக்குறுதிகளை திமுக அளித்தது. அதில் 70 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஆனால், மத்திய அரசு எதையும் செய்யவில்லை என தொடர்ந்து கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து வரும் திமுகவை விரட்டி அடிக்க வேண்டும்.
5 மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறுவதாகவும், திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும் கூறினார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் மந்திரி பதவி கேட்கிறதா? ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தது ஏன் என்பதை முதல்வர் ஸ்டாலினிடம் யாரும் கேட்பதில்லை. காங்கிரஸ் கட்சியில் பூத் கமிட்டி அமைக்கக் கூட யாரும் இல்லை என திமுக எம்எல்ஏ பேசியுள்ளார். இதுபற்றி முதல்வரிடம் யாரும் கேட்கவில்லை. எங்கள் கூட்டணியில் சிறிதாக எது நடந்தாலும் பூதாகரமாக பேசுகிறார்கள்.
தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. போலீசார் உடன் பணிபுரியும் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். ஆட்சி முடியும் நேரத்தில், அடுத்து ஆட்சிக்கு வர முடியாத நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி நிறைவேற்ற முடியும் என்பதை யாரும் கேட்பதில்லை. பாஜகவிடம்தான் நிறைய கேள்வி கேட்கிறீர்கள். ஸ்டாலினிடம், செல்வப்பெருந்தகையிடம் யாரும் கேட்பதில்லை.
பிரதமர் முன்னெடுப்பில் 23 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. ஐநா சபைக்கு போனாலும், அயோத்திக்கு போனாலும் தமிழ் பேசுவதை பார்க்கலாம். தமிழக பட்ஜெட்டில் திருப்பரங்குன்றத்துக்கு தனியாக நிதி ஒதுக்குவதில்லை. அதுபோல்தான் மத்திய பட்ஜெட்டில் மொத்தமாக நிதி ஒதுக்கப்படும். பின்னர் அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுக்கப்படும்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 11 மருத்துவக் கல்லூரி வந்தது. ஸ்டாலின் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தாரா? கேட்டால் டப்பா இன்ஜின் என்கிறார்கள். தமிழகத்தில் நடைபெறுவது கஞ்சா இன்ஜினா?
மதுரை மட்டும் குப்பையாக இல்லை. தமிழ்நாடே குப்பையாக உள்ளது. காங்கிரஸ் கட்சியால் தனியாக போட்டியிட முடியுமா? விஜய் உடன் கூட்டணி போக எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியது காங்கிரஸ். முடியாமல் போனதால் திமுக கூட்டணியில் உள்ளது. எங்கள் கூட்டணி பொருந்தும் கூட்டணி. திமுக கூட்டணி பொருந்தா கூட்டணி.
அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு ஒரு தகுதியும் இல்லை. ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. இன்னும் விசில் அடித்துக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது. ராகுல் காந்தி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது. தமிழை வைத்து பிச்சை கூட எடுக்க முடியாது என ஒருவர் பேசியதாகத்தான் நிதியமைச்சர் நிர்மலா பேசினார். அது அவரது கருத்து கிடையாது. கமல்ஹாசனுக்கு இது தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள்












Click it and Unblock the Notifications