மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசு.. வெல்லும் வீரர் யார்?.. துவங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு விழா, வருடந்தோறும் தை 3ம் தேதி நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது.. லாக்டவுனும் அமலில் உள்ளது.. அதனால், ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது.. ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி, மதுரை சரக டிஐஜி மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டனர்...

அன்னலட்சுமியும்.. யோகதர்ஷினியும்.. பரபர ஜல்லிக்கட்டு களத்தில் மாஸ் காட்டிய இளம் தமிழ்ப்பெண்கள்.. செமஅன்னலட்சுமியும்.. யோகதர்ஷினியும்.. பரபர ஜல்லிக்கட்டு களத்தில் மாஸ் காட்டிய இளம் தமிழ்ப்பெண்கள்.. செம

காளைகள்

காளைகள்

அலங்காநல்லூர் ஜல்லிகட்டிற்காக இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் மூலமாகவே ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.. அதன்படி, 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்யப்பட்டன.. ஆனால், பார்வையாளர்கள் 150பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது... தேர்ந்தெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரர்களுக்கும் இன்று காலை மீண்டும் மருத்துவ குழுவினரால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது..

போட்டி

போட்டி

பிறகு அவர்கள் களத்தில் விளையாட அனுமதியும் தரப்பட்டதையடுத்து, போட்டி தொடங்கியது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர். களமிறங்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு தலா ஒரு தங்ககாசு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... அதைவிட முக்கியம், இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தங்க காசும், புதிய கார் ஒன்றும் வழங்கப்படவுள்ளது...

உதயநிதி

உதயநிதி

அதுமட்டுமல்ல, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மாடுகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு தங்க காசும் பரிசாக வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருக்கிறார். ஆக மொத்தம், ஐந்தாயிரத்திற்கும் குறையாமல் ஒவ்வொரு காளைக்கும் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக ஜல்லிக்கட்டு விழா கமிட்டிக்குழுவினர் தெரிவித்திருந்ததையடுத்து, ஆவல் பெருகி உள்ளது.. இதைதவிர, எல்இடி டிவி, பீரோ, கட்டில் உள்ளிட்ட சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன...

 கோயில் காளை

கோயில் காளை

வீரர்கள் தங்கள் காளைகளை அடக்கி வருகின்றனர்.. பாதுகாப்பு பணியில் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்... முன்னதாக, நேற்றைய தினம், ஜல்லிக்கட்டு காளை வாடிவாசல் வழியாக வர வேண்டும் என்ற முறை இருந்ததால், முத்தாலம்மன் கோவிலில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கிராம முக்கியஸ்தர்கள் தெய்வ வழிபாடு செய்த பிறகு, கோயில் காளைகளை மட்டும் ஜல்லிகட்டு வாடிவாசல் வழியாக அழைத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
CM MK Stalins Car gift announces and Today the World famous Jallikattu started in Allanganallur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X