தேர்தல் ஸ்பெஷல்: தாமரைக் கட்சிக்கு முக்கியத்துவம்.. சோகத்தில் மதுரை அதிமுகவின் முக்கிய தலை!
மதுரை: பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்ட நாள் தொடங்கி, மதுரை மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக அதிமுக நிர்வாகிகள் கவலை கொண்டுள்ளனர். ஏற்கனவே சொந்த தொகுதியில் ஆளுங்கட்சி அமைச்சரின் தீவிரப் பணியால் சோர்ந்து போயிருக்கும் அந்த நிர்வாகி, கட்சித் தலைமையும் பாஜகவுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தி இருப்பதால் கவலை அடைந்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் மதுரையைச் சேர்ந்த முக்கிய அதிமுக நிர்வாகி திமுக பக்கம் தாவ இப்போதே யோசனையில் இருக்கிறார். ஏற்கனவே தென் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இபிஎஸ் காரில் இருந்து இறக்கிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். இருப்பினும் அவமானத்தை கடந்து கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டினார்.

ஆனால் ஆளுங்கட்சி அமைச்சரின் பணிகளால் மிரண்டு போன அந்த நிர்வாகி, அதிமுக தலைமையிடம் தொகுதி மாறுவது தொடர்பாக கேட்டிருக்கிறார். ஆனால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் தொகுதி மாறக் கூடாது என்பதில் அதிமுக தலைமை பிடிவாதமாக இருக்கிறது. இதனால் அதிமுக நிர்வாகி மனதளவில் சோர்ந்து போய்விட்டார்.
இருப்பினும் கட்சிப் பணிகளை மேற்கொண்ட வந்தவருக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல் ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதானது அண்மையில் மதுராந்தகத்தில் நடக்கவிருந்த என்டிஏ பொதுக்கூட்டம் முதலில் மதுரையில் நடப்பதாக இருந்தது. அப்போது பாஜக நிர்வாகிகள் தரப்பில் அனுமதி கடிதம் கோரி மாவட்ட கண்காணிப்பாளரை சந்திக்க சென்றனர்.
அப்போது அதிமுகவின் 3 முக்கிய நிர்வாகிகளும் பாஜக நிர்வாகியின் தலைமையில் சென்று அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அதிமுக நிர்வாகி, பாஜகவின் நிர்வாகிகள் பெயரை கூட சொல்ல மனசு இல்லாமல் நின்றுக் கொண்டிருந்தார். அவருக்கு சொல்லி கொடுத்து பெயரை சொல்ல வைத்தனர்.
அப்போதும் கூட மதுரைக்கே உரித்தான நக்கலுடன் பேசிவிட்டு சென்றார். இதன்பின் அதிமுக நிர்வாகி தொகுதி பணிகளில் பெரிய ஆர்வம் இல்லாமல் கவலையோடு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மதுரையில் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மதுரை தெற்கு மற்றும் மேலூர் ஆகிய 2 தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறது. இதனால் பாஜக கூடுதல் அதிகாரம் செலுத்துவதாக ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறார்.
அதேபோல் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தால், உடனடியாக திமுகவில் ஐக்கியமாகவும் தயாராகிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் தேர்தலுக்கு மதுரை அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
-
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?












Click it and Unblock the Notifications