சீனிவாசனுக்கு தான் உரிமை.. தேவர் கவசத்திற்கு ஓபிஎஸ் சொந்தம் கொண்டாட முடியாது.. சீறிய செல்லூர் ராஜூ!
மதுரை : தேவர் தங்கக் கவசம் தனிநபருக்கு சொந்தமானது கிடையாது என்றும், கட்சியின் பொருளாளர் என்பதற்காகவே ஓபிஎஸ்ஸுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தற்போது அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார். அதிமுக வங்கி கணக்குகளை பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனே நடைமுறைப்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் அவரிடம் தான் தங்கக் கவசத்தை கொடுக்க வேண்டும் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு அதிமுக நிச்சயம் கட்டுப்படும் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தேவர் தங்கக் கவசம்
தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி ஒன்றின் கிளையில் அதிமுக, பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரிலான வங்கி கணக்கின் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும் இந்த தங்கக் கவசம் அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தியின் போது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும். இந்நிலையில், தங்க கவசத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் நாளை (அக்.26) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

செல்லூர் ராஜூ
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று மருது சகோதரர்களின் 221 வது நினைவு நாளை முன்னிட்டு அவர்களது சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பசும்பொன் தேவருக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினார். பசும்பொன் தேவரின் தங்கக்கவசம் தனிநபருக்குச் சொந்தமானது கிடையாது. இதற்கு முன்புவரை, கட்சியின் பொருளாளர் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

ஓபிஎஸ் சொத்து கிடையாது
தேவர் தங்கக் கவசம் ஓபிஎஸ் எனும் தனிநபருடையதோ அல்லது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டதோ கிடையாது. தேவரின் தங்கக் கவசம் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விதிகளில் என்ன இருக்கிறது என்றால், அதிமுகவின் பொருளாளராக இருப்பவரின் கையெழுத்தைப் பெற வேண்டும் என்றுதான் உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு கட்சியில் பிரச்சினை ஏற்பட்ட போது, ராமநாதபுரம், மதுரை மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்தனர். அது போன்ற நிலை தற்போது இல்லை.

நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவோம்
தற்போது அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார். அதிமுக வங்கி கணக்குகளை பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனே நடைமுறை படுத்தி வருகிறார். எனவே அதன் அடிப்படையில் எங்களிடம் தான் தங்கக் கவசத்தை கொடுக்க வேண்டும். அதேசமயம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் கொள்கைகளை கடைபிடிக்கும் நாங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு என்றென்றும் கட்டுப்படுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications