நள்ளிரவில் பயங்கரம்.. மதுரை ரயில் நிலையம் அருகே மோசமான தீ விபத்து.. ஒருவர் பலி.. திக்திக் சம்பவம்
மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள மேல வெளி வீதியில் எல்.ஐ.சி அலுவலகம் இரண்டாவது மாடியில் திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையின் பிரதானப் பகுதியில் எல்ஐசி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள உள்ள மேல வெளி வீதியில் இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தான் சற்று நேரத்திற்கு முன்பு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். தீயை அணைக்கும் பணிகளில் அவர்கள் இறங்கினர். மேலும், 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்த அலுவலகத்தில் இருந்த நிலையில், அவர்களுக்கு என்ன ஆகுமோ என்றும் அச்சம் ஏற்பட்டது.

துரிதமாகச் செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அந்தப் பெண் மதுரை எல்லிஸ்நகரை சேர்ந்த 55 வயதான கல்யாணி நம்பி என்பதும் அவர் அங்கு முதுநிலை மேலாளராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. அவரது உடல் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல மற்றொரு ஊழியரும் தீ காயங்களுடன் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. உள்ளே வேறு யாராவது இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.
தீவிபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரையின் பிரதானப் பகுதியில் இரவு நேரம் திடீரென ஏற்பட்ட இந்தத் தீவிபத்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications