மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சகிப்புத்தன்மை வேணும்-அனைவரும் சேர்ந்து வாழனும்- சர்ச்சுக்கு எதிரான வழக்கில் ஹைகோர்ட் கிளை அட்வைஸ்

Google Oneindia Tamil News

மதுரை: தம்மை சுற்றி உள்ளவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் என்று சர்ச் கட்டுவதற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

கன்னியாகுமரி நெடுவிளையில் தங்கராஜ் என்பவர் சர்ச் ஒன்றை கட்டுவதற்கு அம்மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். இந்த அனுமதியை ரத்து செய்ய கோரி பால்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

Tolerance Should Be Shown Towards Religious Practices: MC High Court

இவ்வழக்கை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகளில் சகிப்புத்தன்மை மிக முக்கியமானது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணைகளுக்குப் பின்னரே அனுமதி தந்துள்ளார்.

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

குடியிருப்பு பகுதிக்குள் சர்ச் கட்ட கூடாது என்பது மனுதாரரின் வாதம். ஆனால் அதே குடியிருப்பு பகுதியில் கோவிலும் இருக்கிறது. தங்களை சுற்றி இருப்பவர்களுடன் இணைந்து வாழ மனுதாரர் கற்றுக் கொள்ளுதல் அவசியம்.

நமது நாட்டின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமைதான். பிற மதத்தினரது நம்பிக்கைகளையும் நாம் மதிக்க வேண்டும். சர்ச் கட்டும்போது பிறருக்கு பாதிப்பு இல்லாமல் வழிபாடு நடத்த வேண்டும். ஒலிபெருக்கி மூலம் பிரார்த்திக்க கூடாது என அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
The Madras High Court's Madurai Bench said that the need to show tolerance towards other religious practices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X