Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குலசையில் மண் பரிசோதனைக்கு பின் ராக்கெட் ஏவுதளம்! இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ‛பளிச்’ பதில்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ‛‛குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பாக மண் பரிசோதனை உட்பட ஒரு சில விதிமுறைகள் உள்ளது. அதன் பிறகுதான் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடியும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஆர்வத்துடன் உதவி செய்து வருகின்றன'' என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.

Recommended Video

    Kulasekarapattinam Rocket Launching Station எப்போ வரும்? | Rocket Launch Port In TN | #TamilNadu

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே சேர்மத்தாய் வாசன் கல்லூரி உள்ளது. இங்கு உலக தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டது.

    இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் மற்றும் காது கேளாதோர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் என்ற ஜெர்லின் அனிகா கலந்து கொண்டனர். இதில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேசியதாவது:

    பெண்கள் வலிமையானவர்கள்

    பெண்கள் வலிமையானவர்கள்

    பெண்கள் மிகவும் வலிமையானவர்கள். ராக்கெட் ஏவுதளத்தில் ராக்கெட்டை நகர்த்தும் 6000 டன் எடையுள்ள கனரக வாகனத்தை ஓட்டுவது ஒரு பெண்தான். இஸ்ரோவின் பல்வேறு பிரிவுகளில் 30 சதவீதம் பெண்கள் வேலை செய்கின்றனர். பெண்கள் என்பவர்கள் வேலை செய்பவர்களாக இருக்கக்கூடாது. வேலையை உருவாக்குபவராக இருக்க வேண்டும். பிரதமர் இத்திட்டத்தையே செயல்படுத்தும் நோக்கத்தில் உள்ளார். உங்களின் தனித்திறமையை வளர்த்து பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக வேண்டும்'' என்றார்.

    நல்ல யோசனை

    நல்ல யோசனை

    அதன்பிறகு சிவன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: விண்வெளி ஆராய்ச்சி படிப்புக்காக தமிழகத்தில் புதிய பல்கலைக்கழகம் தொடங்குவது ஒரு நல்ல யோசனை. இணைய பயன்பாட்டில் தற்போதுள்ள இளைஞர்கள் தெளிவாக உள்ளனர்.இதனால் தமிழகத்தில் இதுபோன்ற படிப்புகளை கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் ஆர்வம்

    மத்திய, மாநில அரசுகள் ஆர்வம்

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பாக மண் பரிசோதனை உட்பட ஒரு சில விதிமுறைகள் உள்ளது. அதன் பிறகுதான் ஏவுதளம் அமைக்க முடியும். இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் ஆர்வத்துடன் உதவி செய்து வருகின்றன.

    அங்கீகாரம் கிடைக்கும்

    அங்கீகாரம் கிடைக்கும்

    பள்ளி மாணவர்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் பதிவு செய்யலாம். மத்திய அரசு இதற்கான வழிமுறைகளை செய்துள்ளது. எனவே எந்தவிதமான கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் தாங்களாகவே வந்து அதை வெளியில் எடுத்து செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்'' என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+