விரலில் வைத்த மை அழிகிறது...குற்றஞ்சாட்டும் மதுரை வாக்காளர்கள் - தேர்தல் அதிகாரிகள் விளக்கம்
மதுரை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் விரலில் வைக்கப்படுகின்ற அடையாள மை அழிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தரமற்ற மையைப் பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மதுரையில் வாக்காளர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் காலை ஆறு முப்பது மணிக்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்பாக சோதனை வாக்குப்பதிவு நடைபெற்றது.

7 மணிக்கு வாக்குப்பதிவு
மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் ஐந்து வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மிக ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

மை அழிவதாக புகார்
மதுரை தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 29ஐ சேர்ந்த பாரிஜாதம் என்ற வாக்காளர் தான் அதிகாலையிலேயே வந்து வாக்கு செலுத்தியதாகவும், ஆனால் தனது விரலில் வைக்கப்பட்ட அடையாள மை உடனடியாக அழிந்து விட்டதாகவும் தரமற்ற மையைப் பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் அதிகாரிகள் விளக்கம்
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் அதிகாரிகள், பொதுவாக ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் வாக்கு செலுத்த வருகின்ற வாக்காளர்களின் விரல்களை துணியால் துடைத்து சுத்தம் செய்து பிறகு கருப்பு மை ஆட்காட்டி விரலில் வைப்பது வழக்கம். இந்த மையை வைத்தவுடன் ஐந்து வினாடிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்காளரின் கைவிரலை பிடித்திருப்பது வழக்கமான ஒன்று.

மை அழிந்தது எப்படி
இந்த நடைமுறை பின்பற்றப்படாததால் உடனடியாக இந்த மை அழிய வாய்ப்பு உண்டு எனவும் அதனை உடனடியாக அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அங்கு உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் தெரிவித்தனர்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications