தேடி வந்த அதிர்ஷ்டம்.. ‘மொட்டையடித்த’ ஆர்பி உதயகுமார்! இவ்ளோ பக்தியா? உண்மையான காரணம் என்ன தெரியுமா?
மதுரை : அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் பிளவுக்கு இடையே எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமியால் முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ்-இன் முன்னாள் தீவிர ஆதரவாளருமான ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைத் தலைவர் பதவி கிடைத்ததால் வேண்டுதலுக்காக அவர் மொட்டை அடித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.. ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து, தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி கட்சி பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் பொருளாளராக இருந்தவருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அதிமுக மோதல்
அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை ஓரம் கட்டும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டல நிர்வாகிகளும் செயல்படுவதாக புகார்கள் அதனை சரிகட்டும் வகையில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கே அதிக முக்கியத்துவத்தை வழங்கினார். எடப்பாடி பழனிச்சாமி இதனால் அவர் மீது கொங்கு மன்ற நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னின்று முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான். ஓபிஎஸ் பதவி நீக்கம் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுக்குழு நியமிக்கும் தீர்மானம் ஆகியவற்றை வாசித்ததும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

முக்குலத்தோருக்கு முக்கியத்துவம்
அதோடு இல்லாமல் அதிமுகவின் முக்கிய பதவிகளான இரு துணைப் பொதுச் செயலாளர்கள் பதவி, பொருளாளர் பதவி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி ஆகியவை முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் ,நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, ஆர்.பி உதயகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக தேனியில் ஓபிஎஸ்-க்கு இருக்கும் செல்வாக்கு போல மதுரையில் ஆர்பி உதயகுமாருக்கு செல்வாக்கு இருக்கிறது. அந்த வகையில் தேனியில் ஓபிஎஸ் செல்வாக்கை சரியா வைக்க ஆர் பி உதயகுமாரை தேர்ந்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வழங்கியதோடு தேனியில் போராட்டம் நடத்தும் பொறுப்பையும் ஒப்படைத்தார்.

ஆர்பி உதயகுமார்
அதை நிறைவேற்றும் வகையில் தேனியில் பிரம்மாண்டம் காட்டினார் ஆர்பி உதயகுமார். எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் மோதலை விட ஆர்பி உதயகுமார் ஓ பன்னீர்செல்வம் மோதலே தற்போது தென் மாவட்டங்களில் பரபரப்பான பேசு பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் திடீரென ஆர்பி உதயகுமார் மொட்டை அடித்து பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தென் மாவட்டங்களில் பேசி பொருளாக இருக்கிறது. அதிமுகவில் முக்கிய பதவிகள் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி கிடைத்ததாகவும் இதன் காரணமாகவே அவர் வேண்டுதலுக்காக மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் எனவும் ஓபிஎஸ் இடத்திற்கு வர வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவு பலித்ததாலேயே இந்த வேண்டுதல் எனவும் கூறப்பட்டு வருகிறது.

உண்மை காரணம் என்ன?
இந்த நிலையில் ஆர்பி உதயகுமார் உண்மையிலேயே எதற்காக மொட்டை அடித்தார் என்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். அப்போதுதான் அதற்கான உண்மையான காரணம் தெரியவந்தது. ஜெயலலிதா காலத்திலும் சரி தற்போது வரையும் சரி ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர் ஆர்பி உதயகுமார். பொதுவாக முடி வெட்டுவது சேவிங் செய்வது போன்ற பழக்கம் அவருக்கு கிடையாது எப்போதும் கடவுள் பக்தியுடன் இருக்கும் அவர் திருப்பதி பழனி மற்றும் குலதெய்வ கோயில்களுக்கு செல்வது வழக்கம். தாடி வளர்த்த முகத்துடன் எப்போதும் காணப்படும் அவர் குறைந்தது இரண்டு மாதங்கள் ஒருமுறையாவது முக்கிய கோவில்களுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம் அந்த வகையில் தற்போது வழக்கமாகத்தான் ஆர்பி உதயகுமார் நேர்த்திக்கடன் செலுத்தி இருக்கிறார் எனவும் பதவி கிடைத்ததால் மொட்டை அடித்து உள்ளார் என்ற தகவல் தவறானது என்கின்றனர் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
என்டிஏவில் அமமுவுக்கு எத்தனை தொகுதிகள்? டெல்லியில் பேசியது என்ன? ஓபனாக சொன்ன டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications