20 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை... மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குர்லா பகுதியில் 20 வயது பெண் ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
எச்டிஐஎல் காலனியில் 20 பெயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை கொலை செய்த நபர்கள் உடலை குடியிருப்பின் மொட்டை மாடியில் உள்ள அறையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார் போலீசார் ஐபிசி 376 மற்றும் 302 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

காலியாக இருந்த அடுக்குமாடி
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் உள்ள குர்லா எனும் பகுதி. இங்கே எச்.டி.ஐ.எல். காலனியில் பொதுமக்கள் வசிக்காத அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. காலியாக உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடியோ எடுப்பதற்காக கடந்த வியாழனன்று சில இளைஞர்கள் மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். மாடியில் துர்நாற்றம் வீசுவதை கண்டு மொட்டை மாடியில் இருந்த பழைய பொருட்கள் அறையை திறந்துள்ளனர்.

தூர்நாற்றம் வீசிய பெண் உடல்
பழைய பொருட்கள் அறையில் அழுகிய நிலையில் பெண்ணிடம் சடலம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். 20 வயது மதிக்கத் தக்க அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு பாலியல் பலாத்காரம்
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்றும், இறந்த பெண் யார் என்று அடையாளம் காண போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இங்குள்ள சிசிடிவி பதிவுகள் ஆராயப்படுவதாகவும் தெரிவித்த போலீசார் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை
இச்சம்பவம் குறித்து மகாராஷ்டிர மாநில பாஜக துணைத் தலைவர் சித்ரா கிஷோர் வாக் கூறுகையில், "ஒரு காலத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு பெயர் பெற்ற மும்பை மாநகரம் தற்போது 'ஜங்கிள் ராஜ்' பாதையில் செல்கிறது என தெரிவித்தார். மும்பை மாநகரத்தில் ஆங்காங்கே சாலைகளில் குழிகள் இருப்பது போல், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என குற்றம் சாட்டினார். அரசாங்கம் மும்பையில் நைட்லைஃப்-க்கு காட்டும் அக்கறையை பெண்களின் பாதுகாப்பிற்கு காட்டவில்லை என அவர் தெரிவித்தார்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
Reliance: 6ஆவது ஆண்டாக ஊதியமில்லாமல் வேலை செய்யும் முகேஷ் அம்பானி! ஏன் என்னாச்சு? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications