மகாராஷ்டிராவில் பரபரப்பு.. பாஜக மாவட்ட துணைத் தலைவர் மீது லைவில் பெண் நிர்வாகி பாலியல் புகார்
மும்பை: மகாராஷ்டிராவில் மாவட்ட பாஜக துணைத் தலைவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறி அக்கட்சியின் மகளிரணி நிர்வாகி புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் இருந்து வருபவர் ஸ்ரீகாந்த் தேஷ்முக்.
இவர் மீது அம்மாநில பாஜக மகளிரணியை நிர்வாகி நிர்மலா (32) பாலியல் புகாரை பேஸ்புக் லைவ் வீடியோ மூலமாக வெளியிட்டு இருக்கிறார்.

பாலியல் புகார்
ஓட்டல் அறை ஒன்றில் ஸ்ரீகாந்த் படுத்து கிடக்கும் நிலையில், நிர்மலா தனது செல்போன் மூலமாக அங்கிருந்து பேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்து இருக்கிறார். அதில், ஸ்ரீகாந்த் தேஷ்முக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக பரபரப்பு குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த வீடியோ மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நிர்மலா மீதும் புகார்
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை தொடர்ந்து பாஜகவிலிருந்து ஸ்ரீகாந்துக்கு அழுத்தம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து பாஜகவின் மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஸ்ரீகாந்த் தேஷ்முக் பதவி விலகி இருக்கிறார். தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்திலேயே நிர்மலா இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாக மோசடி
இது தொடர்பாக பாஜக மகளிரணி நிர்வாகி நிர்மலா மீதே காவல் நிலையத்தில் மோசடி புகாரை அளித்து இருக்கிறார் ஸ்ரீகாந்த் தேஷ்முக். அதேபோல், ஸ்ரீகாந்த் தேஷ்முக் மீதும் நிர்மலா காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்து இருக்கிறார். தன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி ஸ்ரீகாந்த் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

வழக்குப்பதிவு
நிர்மலாவின் புகாரை தொடர்ந்து ஸ்ரீகாந்த் மீது மகாராஷ்டிரா மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிராவில் பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியமைத்த நிலையில், பாஜக மாவட்ட துணை தலைவர் மீதான பெண் நிர்வாகியின் பாலியல் புகார் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications