மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை எதிர்கொள்ள புது திட்டம்.. மகாராஷ்டிராவில் கைகளில் ஸ்டாம்ப் ஓட்டும் அரசு.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 1700க்கும் அதிகமானோர் கைகளில் ஸ்டாம்ப் ஒட்டப்பட்டுள்ளது. இவர்களை அடையாளம் காண வசதியாக இந்த ஸ்டாம்ப் ஒட்டப்பட்டுள்ளது.

Recommended Video

    'கொரோனா... இன்று!' 'ஒன் இந்தியா' டெய்லி ஸ்பெஷல் அப்டேட்!

    இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 125 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் மகாராஷ்டிராவில்தான் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு மட்டும் வைரஸ் காரணமாக 39 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மகாராஷ்டிராவில் மொத்தம் 3 சிறுவர்கள் உட்பட 39 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோல் 1755 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    ஒரே நாளில் கூடுதலாக 11 பேருக்கு பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 125ஆக உயர்வு ஒரே நாளில் கூடுதலாக 11 பேருக்கு பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 125ஆக உயர்வு

    எப்படி பரவும்

    எப்படி பரவும்

    இந்த கொரோனா வைரஸ் என்பது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொடுதல் மூலமும் நெருக்கமாக இருப்பதன் மூலமும் பரவக்கூடிய வைரஸ் ஆகும். அதனால் இந்த வைரஸ் தாக்கிய நபர்கள் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்களோ அவர்களை எல்லாம் உடனே சோதிக்க வேண்டும். அவர்களை எல்லாம் தனிமைப்படுத்த வேண்டும்.

    என்ன கடினம்

    என்ன கடினம்

    உதாரணமாக ஏ என்ற நபருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருந்தால் அவர் இதற்கு முன் தொடர்பு கொண்ட பி, சி, டி, இ என்று எல்லா நபர்களையும் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின் அவர்களை வீட்டிலேயே மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்த வேண்டும். 14 நாட்கள் இப்படி இவர்களை தனியாக வைக்க வேண்டும். இதில் என்ன பிரச்சனை என்றால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் நபர்கள் அவ்வப்போது வெளியே செல்ல வாய்ப்புள்ளது.

    என்ன வாய்ப்பு

    என்ன வாய்ப்பு

    14 நாட்கள் வீட்டுக்குள் இருக்க முடியாமல் இவர்கள் வெளியே செல்ல வாய்ப்புள்ளது. இந்த வைரஸின் தீவிரம் தெரியாமல், இவர்கள் வெளியே செல்ல வாய்ப்புள்ளது. இவர்கள் வெளியே சென்றால் மற்றவர்களுக்கும் வைரஸ் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க முடியாமல் கேரளா அரசு ஏற்கனவே இவர்களின் வீட்டிற்கு பாதுகாப்பு போட ஆள் அனுப்பி உள்ளது. இவர்களை வெளியே செல்ல விடாமல் இந்த பாதுகாவலர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிரா

    இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இப்படி அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் நபர்களை கண்டுபிடிக்க புதிய முறையை கண்டுபிடிக்கப்படுகிறது. 1755 பேர் கையிலும் தற்காலிக டேட்டூ குத்தப்பட்டுள்ளது. இவர்களை எங்கிருந்து பார்த்தாலும் அடையாளம் காணும் வகையில் டேட்டூவும் ஸ்டாம்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாளத்துடன் இவர்கள் வெளியே சென்றால் எளிதாக கண்டுபிடிக்கலாம். மக்களும் இவர்களை குறித்து சுகாதார துறைக்கு புகார் அளிக்கலாம்.

    என்ன புகார்

    என்ன புகார்

    ஆம் கையில் இப்படி ஸ்டாம்புடன் வெளியே வரும் நபர்களை பற்றி புகார் அளிக்கும்படி அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வீட்டில் இருக்கும் யாரும் வெளியே செல்லகூடாது. அதையும் மீறி வெளியே சென்றால் அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    English summary
    Coronavirus: Maharashtra government uses stamps to identify people quarantined in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X