மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆதித்யா தாக்கரேவை முதல்வராக பார்க்க ஆசை.. சிவசேனாவின் திடீர் கோரிக்கை

சிவசேனா விடுத்துள்ள கோரிக்கையால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக - சிவசேனா கூட்டணி. ஆனால் சிவசேனாவின் திடீர் கோரிக்கையால் பாஜக தரப்பு குழப்பம் அடைந்துள்ளது.

தேர்தலின்போது மட்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும். மற்ற நேரங்களில் பாஜகவுக்கு கடுமையான குடைச்சலைக் கொடுக்கும். அதுதான் சிவசேனாவின் இயல்பு. ஆனால் பாஜக இதை பெரிசா கண்டுக்காது.. ஏனென்றால் எப்படியும் தங்களிடம் வந்து சேர்ந்துதான் ஆக வேண்டும் என்பது பாஜகவுக்கு தெரியும்.

இந்த தேர்தலுக்கு முன்பும் கூட பாஜகவை கடுமையாக சாடி வந்தது. ஆனால் தேர்தலின் போது சமர்த்தாக வந்து ஒட்டிக் கொண்டு விட்டது.

ஹரியானா... காங்கிரஸ் திடீர் எழுச்சி.. மெஜாரிட்டியை பெற முடியாமல் பாஜக தவிப்புஹரியானா... காங்கிரஸ் திடீர் எழுச்சி.. மெஜாரிட்டியை பெற முடியாமல் பாஜக தவிப்பு

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

சிவசேனா தலைவர் பால் தாக்கரே குடும்ப வரலாற்றிலேயே முதல் முறையாக அவரது பேரன் அதாவது சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கேரவின் மகன் ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிட்டார். மும்பை ஒர்லி தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி முகத்தில் உள்ளார்.

உற்சாகம்

உற்சாகம்

தாக்கரே குடும்பத்திலிருந்து ஒருவர் சட்டசபைக்குப் போகப் போவது இதுவே முதல் முறை என்பதால் சிவசேனா கட்சியினர் உற்சாகத்துடன் உள்ளனர்.. வேற லெவல் சிந்தனைக்கு இப்போது அவர்கள் போகத் தொடங்கி விட்டனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

சிவசேனா தலைவர் சஞ்சய் ராத் இதை ஆரம்பித்து வைத்துள்ளார். தேர்தல் முடிவு குறித்து ராத் கூறுகையில், ஆதித்யா தாக்கரேவை மகாராஷ்டிர முதல்வராக பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார். இது பாஜகவினரை குழப்பத்தில்ஆழ்த்தியுள்ளது.

சிவசேனா

சிவசேனா

சிவசேனாவை கழற்றி விட்டு விட்டு மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க முடியாது. காரணம் தனிப் பெரும்பான்மை பலம் இன்னும் பாஜகவுக்கு அங்கு கிடைக்கவில்லை. இதை மனதில் வைத்துத்தான் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆதித்யாவை முதல்வராக பார்க்க ஆசை என்று பிட் போட்டு விட்டுள்ளது. சிவசேனா தான் நினைத்ததை சாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யும்.

யார் முதல்வர்?

யார் முதல்வர்?

அந்த வகையில் பாஜகவுக்கு கடுமையான நிர்ப்பந்தத்தை கொடுத்து ஆதித்யாவை முதல்வர் பதவியில் அமர்த்தக் கூட அது முயலக் கூடும் என்பதையே சஞ்சய் ராத் பேட்டி சுட்டிக் காட்டுகிறது. முழுமையான முடிவுகளுக்கப் பிறகே மகாராஷ்டிராவில் யார் முதல்வராக அமர்வார் என்பது தெளிவாகும்.

English summary
Maraharashtra and Haryana Assembly Election 2019: in haryana shiv sena may ask for cm post from
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X