இப்படி ஒரு படிக்கட்டா! அப்படியே அசந்து போன ஆனந்த் மகிந்திரா.. அப்படி இதுல என்னதான் இருக்கு?
மும்பை: தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
நாடறிந்த தொழிலதிபர்களில் ஒருவர் ஆனந்த் மகிந்திரா. மகிந்திரா குழுமங்களுக்கு சொந்தமான இவர் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக செயல்படக்கூடியது நாம் அனைவரும் அறிந்ததே.
அசாத்திய திறமையுடன் கூடிய செயல்கள், வேலைப்பாடுகள் ஆகியவற்றையும் அதை செய்பவர்களையும் தனது சமூக வலைத்தளங்களில் பகிரும் ஆனந்த் மகிந்திரா, அத்தகைய வீடியோக்களை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தி விடுவார்.

மடிக்கும் படிக்கட்டுகள்
அப்படி ஆனந்த் மகிந்திரா பகிரும் தகவல்கள் அன்றைய நாள் முழுவதும் பேசுபொருளாகி அதன் மீதான விவாதங்கள் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு ஆனந்த் மகிந்திராவின் டுவிட்கள் சமூக வலைத்தளங்களில் பரிட்சயம் மிக்கது என்றால் மிகையல்ல. அந்த வகையில், மடிக்கும் வகையிலான படிக்கட்டுகளை தொழிலாளி ஒருவர் கட்டியிருந்த வீடியோவை ஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ளார். அந்த நபரை வெகுவாக பாராட்டியுள்ள ஆனந்த் மகிந்திரா, மடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகள் குறித்த வீடியோவையும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ்-அப்பில் கிடைத்தது
ஆனந்த் மகிந்திரா தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்த படிக்கட்டு வடிவமைப்புகள் மிகவும் புதுமையானது, எளிமையானதும் கூட.. அதிக இட வசதி தேவைப்படவில்லை என்பதோடு, கவர்ச்சிகரமானமதாகவும் உள்ளது. கட்டிட வடிவமைப்புக்கு பெயர் போல ஸ்காட்ண்டிலாவியனர்களையே இந்த நபரின் வேலைப்பாடு பொறாமை கொள்ளச்செய்யும். இந்த மடக்கும் வகையிலான படிக்கட்டுகள் எங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு வாட்ஸ்-அப் மூலம் இந்த வீடியோ கிடைத்தது.

4 லட்சம் பார்வையாளர்கள்
இன்றைய நெருக்கடியான வாழ்க்கை முறை சூழலில், அதிக இட வசதி தேவைப்படாத வகையில் பல்வேறு கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதை நாம் கண்டு வந்தாலும் புதுமையான இந்த மடக்கும் வகையிலான புதிய படிக்கட்டுகள் நெட்டிசன்களையும் வாய் பிளக்க வைத்துள்ளது. ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த இந்த வீடியோ 4 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரல் ஹிட் அடித்து வருகிறது.

புதுமையான சிந்தனை ஆற்றல்
இது பற்றி நெட்டிசன் ஒருவர் கூறுகையில், 'முற்றிலும் கற்பனைத்திறன் மற்றும் புத்திசாலித்தனத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதைக கட்டிய நபருக்கு பாராட்டுக்கள்...'என பதிவிட்டுள்ளார். மக்கள் தொகை நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இதுபோன்ற புதுமையான, அதிகம் இடம் தேவைப்படாத கட்டிடங்கள் அமைப்பது அவசியமான ஒன்று என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். கட்டிடம் கட்டியவர் புதுமையான சிந்தனை ஆற்றல் மிக்கவராகவே இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ள பல நெட்டிசன்கள், இந்த வீடியோவை பகிர்ந்து பிரபலம் அடையச் செய்த உங்களுக்கும் பாராட்டுகள் என ஆனந்த் மகிந்திராவை சேர்த்தே பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications