Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சைக்கோ மாப்பிள்ளை.. முதலிரவு அறையிலிருந்து அலறிய மணமகள்.. ஓடிப்போய் பார்த்து அதிர்ந்த உறவினர்கள்

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகையில் புதுமணப்பெண்ணுக்கு இயற்கைக்கு மாறாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மணமகன் மீது பெண் வீட்டார் புகார் கொடுத்தனர்.

Recommended Video

    Nagai-யில் ஒரு சைக்கோ மாப்பிள்ளை | Telangana-வில் திருமணம் ஆன 1 நாளில் கர்ப்பம் ஆன பெண்

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த நாகராஜன். இவரது மனைவி பரமேஸ்வரி. இவருக்கு 26 வயதில் நளினி என்ற மகள் உள்ளார். இவருக்கும் நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த தொழுதூரை சேர்ந்த பிச்சையனின் மகன் ராஜ்குமாருக்கும் (37) இரு வீட்டார் முன்பு திருமணம் நடைபெற்றது.

    கடந்த 27ஆம் தேதி திருமண மண்டபத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் மணப்பெண் தாய் பரமேஸ்வரி எஸ் பி அலுவலகக்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார்.

    12 பவுன் நகை

    12 பவுன் நகை

    அந்த புகார் மனுவில் பரமேஸ்வரி கூறியிருப்பதாவது: திருமணத்திற்கு வரதட்சிணையாக 12 பவுன் நகை , பைக் மற்றும் ரூ 3 லட்சத்திற்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினோம். திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டில் எங்கள் பெண்ணுக்கு முதலிரவு நடந்தது. என் மகளை இயற்கைக்கு மாறாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

    மகள் அலறல்

    மகள் அலறல்

    மகளின் அலறல் சப்தம் கேட்டு உறவினர்கள் முதலிரவு அறைக்கு ஓடியுள்ளனர். அதை பார்த்து ராஜ்குமார் தப்பிவிட்டார். உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கி கிடந்த என் மகளுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனநலம் பாதித்தவரை போல் நடந்துக் கொண்டுள்ளார்.

    ராஜ்குமார் மீது புகார்

    ராஜ்குமார் மீது புகார்

    எனவே மணமகன் ராஜ்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். உடல் முழுவதும் காயங்களுடன் சிகிச்சை பெறும் நளினி, அந்த சம்பவத்தை நினைத்து மிகவும் அச்சத்துடனே இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

    விசாரணை

    விசாரணை

    உண்மையில் ராஜ்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவரா, கல்யாணம் பண்ணா சரியாகிடும் என்ற நம்பிக்கையில் அவரது பெற்றோர் தங்களது மகனுக்கு நளினியை திருமணம் செய்து வைத்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. லட்சக்கணக்கில் கொட்டி கொடுத்து மகளை திருமணம் செய்து கொடுத்தும் இப்படி ஒரு சூழலால் மணமகள் வீட்டார் வேதனையில் உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+