நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடம்பே சிலிர்க்கும்! வேற லெவல் 'சூப்பர் பவர்களை' கொண்ட 4 விலங்குகள்! அதிசயம்! தெரிஞ்சுக்கலாம் வாங்க

Google Oneindia Tamil News

நியூயார்க்: இதுவரை சூப்பர் பவர் திறன்களைக் கொண்ட சூப்பர் ஹீரோக்களின் திரைப்படங்களை தானே நாம் பார்த்திருப்போம். ஆனால் அந்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களை விட பல மடங்கு சூப்பர் பவர்களை கொண்ட உயிரினங்கள் நம் பூமியில் இருக்கவே செய்கின்றன.

பொதுவாக, இயற்கை ஒரு உயிரினத்தை உருவாக்குகிறது என்றால் அந்த உயிரினம் இந்த பூமிக்கு அவசியம் என்றுதான் அர்த்தம். இது அறிவியல் உண்மையும் கூட. எறும்பு முதல் யானை வரை ஒவ்வொரு உயிரினமும் உலகின் சமநிலையை பாதுகாக்கவும், உணவுச் சங்கிலியை வலுப்படுத்தவும் அவசியம்.

இதற்கான பணியை அவற்றுக்கு தெரியாமலேயே அவை செய்து கொண்டிருக்கின்றன. இதில் மனிதர்களும் அடக்கம். உதாரணமாக, உலகில் உள்ள அனைத்து தேனீக்களும் திடீரென அழிந்துவிட்டால் ஒரு சில ஆண்டுகளிலயே உணவு பஞ்சம் ஏற்பட்டு பூமியில் உள்ள ஜீவராசிகள் அழிந்து போய்விடும் என்கிறது அறிவியல். இதன் காரணமாகவே, ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதனை பாதுகாக்க தேவையான தற்காப்பு அம்சங்களை இயற்கை வழங்கி இருக்கிறது. தேனீக்கு கொடுக்கு, பாம்புக்கு விஷம், ஆமைக்கு ஓடு என இதுபோன்ற பல உதாரணங்களை நாம் கூற முடியும். அதுமட்டுமல்லாமல், சில உயிரினங்கள் தாங்கள் வசிக்கும் இடங்களின் நிறங்களிலேயே இருக்கும். பச்சொந்தி, சில வகை பாம்புகள், பறவைகள், மீன்கள் இந்த வகை அம்சங்களை கொண்டிருக்கும். இதற்கு கேமோஃப்ளெஜ் (camouflage) என்று பெயர்.

இந்நிலையில், இந்த தற்காப்பு அம்சங்களை விட பல மடங்கு விசித்திரமான 'சூப்பர் பவர்' திறமைகளை இயற்கையிலேயே பெற்றிருக்கும் சில உயிரினங்களை குறித்துதான் இங்கு பார்க்க போகிறோம். ஸ்பைடர் மேன், பேட் மேன், உல்வரின் மேன் கதாபாத்திரங்களை போல இந்த உயிரினங்கள் அதீத பவர்களை கொண்டிருக்கின்றன.

 கடம்பூர் பேரூராட்சி தேர்தல்.. 9 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு-மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு! கடம்பூர் பேரூராட்சி தேர்தல்.. 9 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு-மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

1. 'உல்வரின்' தவளை (Wolvernie frog)

1. 'உல்வரின்' தவளை (Wolvernie frog)

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒரு தவளை இனம்தான் உல்வரின் தவளை. 'உல்வரின்' என்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்தை ஒத்திருப்பதால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது. பார்க்க சாதாரண தவளையை போல் தெரிந்தாலும் அருகே சென்றால் மட்டுமே இதன் பிரத்யேக அம்சங்களை நம்மால் பார்க்க முடியும். இந்த வகை தவளைகளுக்கு உடலில் உல்வரின் கதாபாத்திரத்தை போலவே உடல் முழுவதும் முடிகள் இருக்கும். இந்த முடிகளில் அதிக அளவில் ரத்த ஓட்டம் பாய்வதால் அவற்றில் ஆக்சிஜன் நிரம்பி இருக்கும். அதனால் அந்த தவளைகளால் மீன்களை போல பல நாட்கள் கூட தண்ணீருக்குள் இருக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல், சாதாரண தவளையாக இருக்கும் இதனை யாரேனும் சீண்டினால்.. முடிந்தது கதை. இதன் விரல்களில் இருந்து அரை இன்ச் அளவுக்கு நகங்கள் வெளியே வந்துவிடும். இந்த நகங்கள் கத்தியை விட கூர்மையாகவும், ஆணியை விட உறுதியாகவும் இருக்கும். இந்த நகங்களை கொண்டு எதிரிகளை பிராண்டியே கிழித்துவிடும். எனவே இந்த தவளைகளை நெருங்க பாம்புகளும், கழுகுகளும் கூட தயங்கி பின்வாங்கிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதனால் 'இப்போ சண்டைக்கு வாங்கடா பாக்கலாம்' என்ற ரேஞ்சிலேயே கெத்தாக இந்த தவளைகள் சுற்றுமாம். உல்வரின் சூப்பர் ஹீரோவுக்கும் இதுபோன்ற இரும்பு நகங்கள் இருக்கும். நியாபகம் இருக்கிறதா.. பெரிய ரவுடியா இருப்பான் போலேயே..

 2. 'லயர்பேர்ட்' (Lyrebird) - மிமிக்ரி மன்னன்

2. 'லயர்பேர்ட்' (Lyrebird) - மிமிக்ரி மன்னன்

இந்த 'லயர்பேர்ட்' பறவை ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் ஒரு வகை பறவை ஆகும். பார்ப்பதற்கு, நம்ம ஊர் காடையை சற்று பெரிதாக்கி அதற்கு அணில் வாலை வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படிப்பட்ட தோற்றத்தில்தான் இருக்கும். தனது இந்த நீண்ட வாலை பயன்படுத்தி வேகமாகவும், நொடிக்கு நொடி திசைகளை மாற்றி பறக்கவும் இந்த பறவைகளால் முடியும். ஆனால் இது அந்த பறவையின் 'சூப்பர் பவர்' அல்ல. இதன் 'சூப்பர் பவர்' என்ன தெரியுமா? அவற்றின் 'மிமிக்ரி' செய்யும் திறமைதான். அதாவது, மனிதன் முதல் விலங்குகள் வரை அனைத்து உயிரினங்களை போலவே இந்த 'லயர்பேர்ட்' அசத்தலாக மிமிக்ரி செய்யும்.

ஒரு இடத்தில் 2 நிமிடங்கள் இந்த பறவை இருந்தாலே போதும்.. அங்கிருக்கும் உயிரினங்களை போல மிமிக்ரி செய்துவிடும் திறமை கொண்டது லயர்பேர்ட். உதாரணமாக, குழந்தைகளின் அழும் சத்தம், துப்பாக்கி தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம், கார்களின் அலார ஒலி, கேமராவின் 'ஷட்டர்' ஒலி, அவ்வளவு ஏன்.. ஆணியை சுத்தியல் கொண்டு அடிக்கும் சத்தம், மரங்களை அரத்தை கொண்டு அறுக்கும் சத்தம், 'வீடியோ கேம்' சத்தம் ஆகியவற்றை துல்லியமாக லயர்பேர்டால் மிமிக்ரி செய்ய முடியும். தன்னை தாக்கவோ அல்லது வேட்டையாடவோ ஏதேனும் விலங்குகள் நெருங்குவது தெரிந்தால், இதுபோன்ற விசித்திரமான குரலை இந்த பறவை எழுப்பும். இதை கேட்கும் அந்த விலங்குகள், வேறு ஏதோ ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்ற பயத்தில் அங்கிருந்து சென்றுவிடும். நெகிழ்வுத்தன்மை கொண்ட குரல் வளையும், அசாத்திய நினைவு சக்தியுமே லயர்பேர்ட் பறவைக்கு இந்த சூப்பர் பவரை தந்திருக்கின்றன. மிமிக்ரி கிங்குன்னா சும்மாவா?

3. 'அக்வா ஸ்பைடர்' - 'பபுல்மேன்' சிலந்தி

3. 'அக்வா ஸ்பைடர்' - 'பபுல்மேன்' சிலந்தி

ஜெர்மனியில் வாழும் ஒரு வகை சிலந்திதான் இந்த அக்வா ஸ்பைடர் சிலந்தி. இதற்கு டைவிங் பெல் சிலந்தி என்ற பெயரும் உண்டு. இது மற்ற சிலந்திகளை போல மரத்திலோ, நிலத்திலோ வசிக்காது. முழுக்க முழுக்க ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் வசிக்கும் சிலந்தி ஆகும். சரி.. இதில் என்ன சூப்பர் பவர் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். இருக்கிறது. இந்த வகை சிலந்திகளுக்கு இயற்கையிலேயே தண்ணீருக்குள் வாழ்வதற்கான தகவமைப்பு இல்லை. ஆனால் இதை ஈடு செய்ய இதனிடம் ஒரு சூப்பர் பவர் திறமை இருக்கிறது. இந்த சிலந்தியால் தண்ணீரில் பெரிய நீர்த்திவளைகளை, அதாவது குழந்தைகள் சோப்பு நீரில் முட்டை விட்டு விளையாடும் அல்லவா. அதுபோல முட்டைகளை கட்டமைக்கும். அதை இது எப்படி செய்கிறது தெரியுமா..

நதியில் இருக்கும் ஏதாவது செடியில் முதலில் வட்டமாக ஒரு வலையை இந்த சிலந்தி பின்னும். பிறகு கரைக்கு வந்து சிறிது நேரம் சுவாசிக்கும். இதையடுத்து, மீண்டும் ஆற்றில் நீந்தி சென்று தான் பின்னிய வலையை அடையும். அப்படி நீந்தி வரும் போது இந்த சிலந்தியின் அடிப்பகுதியில் இருக்கும் முடிகள் தண்ணீரை கிரகித்துக் கொள்ளும். பின்னர் இந்த தண்ணீரை அந்த வலையில் வைத்து தன்னை சுற்றி அழகான நீர் முட்டையை செய்துவிடும். இந்த முட்டைக்குள் தண்ணீரில் இருக்கும் ஆக்சிஜன் இருப்பதால் மூன்று நாள் வரை அந்த முட்டைக்குள் இந்த சிலந்தி இருக்கும். இந்த முட்டையை சாதாரண தண்ணீர் திவளைகளை போல எளிதில் உடைக்க முடியாது. எனவே தண்ணீரின் மேற்பரப்பிலும், தேவைப்பாட்டால் தண்ணீருக்குள் ஒரு நீர்மூழ்கி கப்பலில் பயணிப்பதை போல இந்த சிலந்தி பயணிக்கும். முட்டைக்குள் இருப்பதால் மற்ற பூச்சிகளால் இதனை வேட்டையாட முடியாது. ஆனால் இவை முட்டைக்குள் இருந்தபடியே தண்ணீரில் இருக்கும் சிறு சிறு பூச்சிகளை இந்த 'பபுல்மேன்' சிலந்தி வேட்டையாடும். ஜாலியான வாழ்க்கைதான்.

4. 'இன்விசிபில் ஸ்குவிட்' (மறையும் கடம்பா மீன்)

4. 'இன்விசிபில் ஸ்குவிட்' (மறையும் கடம்பா மீன்)

பல சூப்பர் ஹீரோ கதைகளில் சட்டென மறைந்துவிடும் திறமை கொண்ட 'இன்விசிபில்' (invisible) கதாபாத்திரங்களை பார்த்திருக்கிறோம் அல்லவா. அதுபோன்ற சூப்பர் பவர் கொண்ட உயிரினத்தை பற்றிதான் பார்க்க போகிறோம். கடம்பா மீன்களை அனைவரும் பார்த்திருப்போம். பலர் கடம்பா மீன்களை சாப்பிட்டும் இருப்பார்கள். குழாய் போன்ற உடலும் முகம் ஆக்டோபஸ் போலவும் இருக்கும். இதனை ஆங்கிலத்தில் 'ஸ்குவிட்' என அழைப்பார்கள். பொதுவாக, அனைத்து கடம்பா மீன்களுக்கும் ஒரு தற்காப்பு அம்சம் உண்டு. எதிரிகள் தாக்க வந்தால் உடனே அது தனது உடலில் இருக்கும் 'கறுப்பு மை' போன்ற திரவத்தை சட்டென பீய்ச்சி அடிக்கும். அடுத்த நொடியே அந்த இடமே கறுப்பாக மாறி ஒன்றுமே தெரியாது. இதனால் எதிரி குழப்பம் அடையும் கேப்பில் இந்த கடம்பாக்கள் தப்பிவிடும்.

ஆனால், இந்த தற்காப்பு அம்சத்தையும் தாண்டி வேறு ஒரு சூப்பர் பவரை சில வகை கடம்பாக்கள் கொண்டிருக்கின்றன. இந்த வகை கடம்பா மீன்கள், எதிரி தன்னை தாக்க வருவதை உணர்ந்தால் போதும் சட்டென மறைந்துவிடும். இது என்ன மாயாஜாலமா என கேட்டால், ஆம் என்று சொல்ல வேண்டும். மேஜிக்குகளில் முக்கிய அம்சமே கண்கட்டி வித்தை தானே. இதைதான் இந்த கடம்பாக்களும் செய்கின்றன. இந்த கடம்பாக்களின் உடலில் நிறத்தை தரும் நிறமிகள் (pigments) இருக்கின்றன. ஆபத்து வரும் போது இந்த நிறமிகளை சுருக்கும் சூப்பர் பவர் இந்த வகை கடம்பாக்களுக்கு இருக்கிறது. அவ்வாறு நிறமிகள் சுருங்கும் போது, இவை நிறமற்றவையாக, அதாவது டிரான்பெரன்டாக (Transparent) மாறிவிடுகின்றன. கிட்டத்தட்ட கண்ணாடியை போல இந்த கடம்பாக்கள் மாறிவிடுவதால், தண்ணீருடன் தண்ணீராக இது மாறிவிடும். இதனால் இதை தாக்க வந்த எதிரி, இதை கண்டுபிடிக்க முடியாமல் சென்றுவிடும். பின்னர் சில மணிநேரங்களுக்கு பிறகு இது பழைய நிறத்துக்கு வந்துவிடும். இந்த சூப்பர் பவர் திறமையை வேட்டையாடவும் இவை பயன்படுத்திக் கொள்ளும். சூப்பர் ஜி.. சூப்பர் ஜி..

English summary
Four incredible animals in the world that have extremely super power to defend themselves and attack their enemies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X