திருப்பூருக்கு நல்ல செய்தி வந்த உடனே... வங்கதேச இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்த அமெரிக்கா
நியூயார்க்: ஜவுளி துறையில் திருப்பூருக்கு கடும் போட்டி அளித்து வருகிறது வங்க தேசம். வங்கதேசத்தின் இறக்குமதி தான் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட ஜவுளிதுறைக்கு போட்டியாக இருக்கிறது. இந்த சூழலில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளரான வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் வங்கதேசமும் வெளியிட்டிருக்கின்றன. அதில் ஜவுளி மற்றும் ஆடைப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கும் வகையில் செயல்படப்போவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளராக வங்கதேசம் உள்ளது. வங்கதேசத்தின் ஏற்றுமதியில் 80 சதவீதம் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியை சார்ந்தே உள்ளது. வங்கதேச வங்கி மற்றும் தேசிய வருவாய் வாரியத்தின் தரவுகளின்படி, வங்கதேசம் 2024 ஆம் ஆண்டில் சுமார் 8.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதே சமயம் அதன் அமெரிக்க இறக்குமதி 2.2 பில்லியன் டாலராக இருந்தது. இதனால் வங்கதேசத்துடன் வர்த்தக பற்றாக்குறையை சரி செய்ய விரும்பிய டிரம்ப், அதிரடியாக வரியை உயர்த்தினார்.

ஏனெனில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஒரு தொழில் அதிபர் ஆவார். லாப நஷ்ட கணக்கு பார்த்தே ஒவ்வொரு நாட்டுடனும் வர்த்தக உறவுகளை பேணி வருகிறார். இதன் காரணமாக கடந்த ஆண்டு இந்தியா, வியட்நாம், சீனா, பிரேசில் உள்பட பல நாடுகள் புதிய வரிகளை எதிர்கொண்டன. அந்த வகையில் வங்கதேசப் பொருட்களுக்கு 37 சதவீத வரி விகிதத்தை நிர்ணயித்திருந்தார். பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் வங்கதேச தயாரிப்புகளுக்கான வரி விகிதத்தை 20 சதவீதமாகக் குறைத்தார்.
இந்த சூழலில், 2024-ல் மாணவர்கள் புரட்சி செய்து அரசாங்கத்தைக் கவிழ்த்த காரணத்தால், அந்நாட்டு தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலையற்ற அரசாங்கம் மற்றும் புரட்சி காரணமாக முதலீடுகள் குறைந்தன. ஏற்றுமதியும் கடுமையாக சரிந்தன. இந்நிலையில் வங்கதேச தொழில் துறை தற்போது மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இடைக்கால அரசு பல்வேறு யுக்திகளை கையாண்டு வர்த்தக உறவை மேம்படுத்தி வருகிறது.
அந்த வகையில், வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் வங்கதேசமும் வெளியிட்டிருக்கின்றன. அதில் ஜவுளி மற்றும் ஆடைப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கும் வகையில் செயல்படப்போவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வங்கதேச தயாரிப்புகள் மீதான அமெரிக்காவின் "பரஸ்பர" வரிகளை 20 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகக் குறைக்க உள்ளது என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் மூலம், "வங்கதேசத்தில் இருந்து வரும் சில குறிப்பிட்ட ஜவுளி மற்றும் ஆடைப் பொருட்களுக்கு பூஜ்ஜிய சதவீத பரஸ்பர வரி விகிதத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கும் ஒரு வழிமுறையை உருவாக்க" அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இனிமேல், ஒரு குறிப்பிட்ட அளவிலான இறக்குமதிகள் முன்னுரிமையை வங்கதேசம் பெற முடியும்.
ஆனால், இந்த அளவு என்பது அமெரிக்காவிலிருந்து வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்கத் தயாரிப்பு பருத்தி மற்றும் செயற்கை இழை போன்ற உள்ளீடுகளின் அளவைப் பொறுத்தே அமையும். ஜவுளிப் பொருட்கள் தவிர, பூஜ்ஜிய சதவீத "பரஸ்பர" வரியைப் பெறக்கூடிய பிற தயாரிப்புகளையும் அமெரிக்கா கண்டறிந்து அதனை கேட்கும். இந்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இரு தரப்பும் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு இது செயல்பாட்டுக்கு வரும் என்று வங்கதேசத்தின் இடைக்கால அரசுத் தலைவர் முஹம்மது யூனுஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
வங்கதேசத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலிலூர் ரஹ்மான் கூறுகையில், அமெரிக்க உள்ளீடுகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான வரி விலக்குகள், எங்கள் ஆடைத் துறைக்கு கணிசமான கூடுதல் உத்வேகத்தை அளிக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
வங்கதேசத்தில் இருந்து தயாரிப்புகளைப் பெறும் அமெரிக்க ஆடை நிறுவனங்களில் புரூட் ஆஃப் தி லூம் , லெவி ஸ்ட்ராஸ் மற்றும் வி.எஃப் கார்ப் (VF Corp - இதன்கீழ் வேன்ஸ், டிம்பர்லேண்ட் மற்றும் தி நார்த் ஃபேஸ் போன்ற பிராண்டுகள் உள்ளன) ஆகியவை அடங்கும்.
-
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications