27 வார்த்தையில் மகனுக்கு பேர் வைத்த தந்தை.. இப்போ பாதி மறந்து போச்சே என புலம்பல்!
மகனுக்கு வித்தியாசமாக பெயர் வைக்க நினைத்து, 27 வார்த்தைகளில் பெயர் வைத்து விட்டு, இப்போது புலம்பி வருகிறார் தந்தை ஒருவர்.
நியூயார்க்: ஆர்வக்கோளாறில் மகனுக்கு 27 வார்த்தைகளில் பெயர் வைத்துவிட்டு, இப்போது அவற்றில் பாதி மறந்து விட்டதாகக் கூறி புலம்பி வருகிறார் தந்தை ஒருவர்.
பெயர் என்பது வெறும் சொல் மட்டுமல்ல.. வாழ்நாள் முழுவதும் நம் உடனேயே ஒட்டிக் கொண்டிருக்கும் அடையாளம். அதனாலேயே பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு முன்பு, நிறைய விசயங்களைப் பெரியவர்கள் யோசிப்பார்கள். ஆனால், அப்படி யோசித்து, வித்தியாசமாக பேர் வைக்கிறேன் பேர்வழி என மகனுக்கு 27 வார்த்தைகளில் பேர் வைத்து பிரச்சினையில் சிக்கியுள்ளனர் ஒரு பெற்றோர்.
இந்தச் சம்பவம் இப்போது நடந்ததில்லை, கடந்த 1970ம் ஆண்டு நடந்துள்ளது. ஆனாலும் இப்போது அந்த தந்தை அளித்த பேட்டியொன்றின் மூலம் இது இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.

புதுமையான பெயர்
சம்பந்தப்பட்ட தம்பதிக்கு 1970ம் ஆண்டு மகன் பிறந்துள்ளார். இதனால் சந்தோசத்தில் இருந்த அந்தப் பெற்றோர், மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு, புதுமையாக தங்களது ஆசை மகனுக்கு பெயர் வைக்க விரும்பியுள்ளனர். இதற்காக தங்களது குடும்பத்தில் இருந்தவர்கள் மற்றும் நண்பர்களின் உதவியை அவர் நாடியுள்ளார்.

மழை
அவர்களும் தங்களுக்குத் தெரிந்த பெயர்களை எல்லாம் பரிந்துரை செய்துள்ளனர். இதில், குடும்பத்தினர் பரிந்துரைத்த பெயரில் ஒன்றை மகனுக்கு முதல் பெயராக மழை (Rain) எனச் சூட்டியுள்ளார் அந்தத் தந்தை. அதனைத் தொடர்ந்து, நடுப்பெயரை நண்பர்கள் சொன்ன பெயர்களில் இருந்து தேர்ந்தெடுக்க அவர் முடிவு செய்தார்.

27 வார்த்தைகள்
அதன்படி, Rain க்கு தொடர்புடைய சொற்களான Storm, Thunder, Cloud, Fire, Flight, Ambrose, Elijah, Food, Bird, Hawk, Wind, Ocean என 27 வார்த்தைகளைச் சேர்த்து தனது மகனுக்கு நீளமான பெயராக வைத்திருக்கிறார் அந்த வினோத தந்தை. ஆனால் சிறுவனாக இருக்கும்போதே அந்தப் பெயரால் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார் அவரது மகன். எனவே, தனது பெயரை அவர் அப்போதே பெட்டி க்ராக்கர் (BETTY CROCKER) என மாற்றிக் கொண்டுள்ளார்.

மறந்து போய்விட்டது
இதனால் காலப்போக்கில் அச்சிறுவனின் 27 வார்த்தை பெயரை அவரது பெற்றோர் மறந்து விட்டனர். எனவே, இப்போது மீண்டும் அவற்றை ஞாபகப்படுத்தும் வேலையில் அவர்கள் இறங்கியுள்ளனர். இது குறித்து அச்சிறுவனின் தந்தை அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'நாங்கள் எங்களது மகனுக்கு உண்மையிலேயே தனித்துவமான முறையில் பெயரிட வேண்டும் என்று நினைத்தோம்.

ஆச்சர்யம்
காதல் புரட்சியை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு, நண்பர்கள் கூறிய 27 வார்த்தைகளை பெயராகச் சூட்டினோம். ஆனால் அவற்றுள் பாதியை நாங்கள் மறந்துவிட்டோம்" என சோகமாக தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி மூலம் தான் இப்படியொரு வினோதமான பெயரை அவர்கள் தங்களது மகனுக்கு வைத்தது தெரிய வந்துள்ளது. அட, இப்படியெல்லாமா பெயர் வைப்பார்கள் என இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர் நெட்டிசன்கள்.

இது தேவையா?
கூடவே, 'இவர்கள் கணக்குப்படிப் பார்த்தால் அந்த மகனுக்கே இப்போது 53 வயதாகி இருக்கும். அப்படியென்றால் நிச்சயம் இந்தத் தந்தைக்கு 70 வயதிற்கு மேல் ஆகி இருக்கும். இந்த வயதில் அப்பாவும், மகனும் இந்த பழைய பெயரை, அதுவும் 27 வார்த்தைகளைத் தேடும் வேலையில் இறங்கி இருக்கிறார்களே' என வியந்து கமெண்ட் செய்துள்ளனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications