விமானம் மோத வருது.. வெளியே போங்க! அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரபரப்பு! தெறித்த எம்பிக்கள்.. என்னாச்சு
நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் விமானம் ஒன்று மோத போவதாக வந்த தகவலால் அதன் உள்ளே இருந்த எம்பிக்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்கள்.
அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அல்கொய்தா மூலம் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களில் விமானங்களை விட்டு மோதி தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். அன்று மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த தீவிரவாத தாக்குதல் அமெரிக்காவையே உலுக்கியது.

தீவிரவாத தாக்குதல்
ஏன் சர்வதேச அரசியலையே இந்த விவகாரம் புரட்டிப்போட்டது. அதுமட்டுமின்றி சர்வதேச அளவில் விமான பயண விதிகள் மாறவும் இது காரணமாக அமைந்தது. இந்த நிலையில்தான் நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் விமானம் ஒன்று மோத போவதாக வந்த தகவலால் அதன் உள்ளே இருந்த எம்பிக்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்கள்.

ரேடார்
அதன்படி நேற்று நாடாளுமன்றத்தை சுற்றி சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு விமானம் ஒன்று பாதை மாறி வருவதாக போலீசாருக்கு கண்காணிப்பு மையத்தில் இருந்து புகார் வந்துள்ளது. ரேடாரில் விமானம் வருவது தெரிந்துள்ளது. அதோடு இந்த விமானம் ஆபத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கலாம் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

பதற்றம்
விமானம் நாடாளுமன்றத்தை நோக்கி வருகிறது என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு 9/11 நாள் நினைவிற்கு வந்துள்ளது. அரசு கட்டிடங்களில் அல்லது பெரிய கட்டிடங்களில் மீண்டும் விமானம் மூலம் தாக்குதல் நடத்துகிறார்களா என்று அஞ்சி போலீசார் துரிதமாக செயல்பட்டனர். வேகமாக செயல்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு உள்ளே சென்று அங்கிருந்த அதிகாரிகளை வேக வேகமாக வெளியேற்றினர்.

வெளியேற்றம்
உள்ளே இருந்த எம்பிக்கள் மற்ற அதிகாரிகளை வேகமாக வெளியேற்றினர். மொத்தமாக அந்த இடம் காலி செய்யப்பட்டது. இதையடுத்துதான் அங்கு விமானம் எதுவும் வரவில்லை, அருகில் நடக்கும் பேஸ்பால் ஆட்டம் ஒன்றிற்காக அங்கு இறக்கப்பட்ட பாராஷூட்தான் ரேடாரில் தவறாக தெரிந்துள்ளது. அங்கு நடந்த பேஸ்பால் நிகழ்ச்சியில் அமெரிக்க ராணுவம் மூலம் பாராசூட்டில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம்
இதற்காக ராணுவ விமானம் அங்கே வந்துள்ளது. இதில் இருந்துதான் பாராசூட்டில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மற்றபடி வேறு விமானம் எதுவும் வரவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வார்னிங் வாபஸ் பெறப்பட்டது. இருந்தாலும் பாதுகாப்பு கருதி அங்கு எம்பிக்கள் யாரும் சில நிமிடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
"மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வருது".. லோக்சபா தொகுதி 816 ஆக அதிகரிக்க மத்திய அரசு தீவிரம்.. பிளான் ரெடி












Click it and Unblock the Notifications