நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த சத்தத்தை கேளுங்க.. விண்வெளியில் கருந்துளைகள் எழுப்பும் "விசித்திர" ஒலி.. நாசாவின் ஆச்சர்ய ஆடியோ

Google Oneindia Tamil News

நியூயார்க்: இரண்டு கருந்துளைகளின் சத்தங்களை நாசா வெளியிட்டுள்ளது. பொதுவாக கருந்துளைகள் எப்படி இருக்கும் என்று புகைப்படங்களை மட்டுமே நாசா வெளியிட்டு இருக்கிறது. முதல்முறை இது போன்ற சத்தத்தை நாசா வெளியிட்டுள்ளது.

Recommended Video

    இந்த சத்தத்தை கேளுங்க.. விண்வெளியில் கருந்துளைகள் எழுப்பும் விசித்திர ஒலி.. நாசாவின் ஆச்சர்ய ஆடியோ

    கருந்துளைகளின் புகைப்படங்கள் சிலவற்றை இதற்கு முனபே நாசா வெளியிட்டுள்ளது. இந்த வாரம்.. உலகம் முழுக்க வானியல் ஆராய்ச்சியாளர்கள் மூலம் கருந்துளை வாரம் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு அதன் சத்தத்தை நாசா வெளியிட்டுள்ளது.

    முதலில் அது என்ன கருந்துளை என்று பார்க்கலாம்!

     கருந்துளை

    கருந்துளை

    வானத்தில் எதோ ஒரு இடத்தில் ஒரு பெரிய துளை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த துளை பெரிய கிரகம் அளவிற்கு இருக்கிறது. அல்லது பல கிரகங்களை விழுங்கும் அளவிற்கு பெரிதாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் உட்பகுதியில் ஈர்ப்பு விசை இருக்கிறது என்றும் வைத்துக்கொள்ளுங்கள். ஈர்ப்பு விசை என்றால் ஒளியை கூட பிடித்து இழுக்கும் அளவிற்கு ஈர்ப்பு விசை. இப்படி விண்வெளியில் பல இடங்களில் காணப்படும் துளைகள்தான் கருந்துளைகள் என்று கூறப்படும். அதாவது அருகில் இருப்பதை எல்லாம் வாரி சுருட்டிக்கொள்ளும் அளவிற்கு ஈர்ப்பு விசை.

    விழுங்கும் திறன்

    விழுங்கும் திறன்

    ஒரு சூரிய குடும்பத்தை அப்படியே நொடியில் விழுங்க கூடிய ஆற்றல் இது போன்ற கருந்துளைகளுக்கு உண்டு. ஆம் பூமிக்கு அருகில் ஒரு கருந்துளை பல ஆயிரம் மீட்டர்கள் தொலைவில் வந்தால் கூட இந்நேரம் பூமியை அந்த துளை விழுங்கி சாப்பிட்டுவிட்டு.. ஏப்பம் விட்டு இருக்கும். ஆனால் கவலைப்பட வேண்டாம்.. நீங்கள் மற்றும் உங்களின் அடுத்த பல நூறு தலைமுறைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஏனென்றால் இப்போதைக்கு எந்த கருந்துளையும் பூமியை நோக்கி வரவில்லை.

    சத்தம்

    சத்தம்

    சரி விஷயத்திற்கு வருவோம்.. இப்படிப்பட்ட கருந்துளைகள் குறிப்பிட்ட விதமான விசித்திர சத்தத்தை எழுப்பும். இதில் இருக்கும் ஈர்ப்பு விசைகள் காரணமாகவும் , அதன் சுழற்சி, நகரும் வேகம் காரணமாகவும் ஏற்படும் ஒலி ஆகும். அதன்படி Perseus கேலக்சியில் இருக்கும் கருந்துளை ஒன்றின் சத்தத்தை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் சந்திரா எக்ஸ் ரே ஆய்வு மையத்தின் மூலம் இந்த கருந்துளையின் டேட்டா எடுக்கப்பட்ட அதை sonification என்ற முறை மூலம் சத்தமாக மாற்றி உள்ளார்.

     எப்படி சத்தம் வரும்

    எப்படி சத்தம் வரும்

    புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் எப்படி இசையமைப்பாளர் எழுதும் ட்யூனை மியூசிக்காக மாற்றுகிறார்கள். அப்படி வைத்துக்கொள்ளுங்கள். அதன்படி Perseus கேலக்சியில் இருக்கும் கருந்துளையின் ஒன்றின் சத்தத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதை மனிதர்கள் காதுக்கு கேட்கும் வகையில் உயர்த்தி உள்ளனர். உண்மையான சத்தத்தை விட 144 quadrillion அளவு சத்தம் உயர்த்தப்பட்டு மனிதர்கள் கேட்கும் வகையில் இந்த சத்தம் மாற்றப்பட்டு இருக்கிறது. Credit NASA.

    இன்னொரு கருந்துளை

    இன்னொரு கருந்துளை

    அதேபோல் Messier 87 அல்லது M87 என்ற கருந்துளையை பலருக்கு தெரிந்து இருக்கும். இது கொஞ்சம் பிரபலமான கருந்துளை. 2017ல் இதன் இமேஜ் வெளியிடப்பட்டது. இதன் சத்தத்தையும் தற்போது அதே sonification முறை மூலம் வெளியிட்டுள்ளனர். இதன் உண்மையான சத்தத்தை விட 178 quadrillion அளவு சத்தம் உயர்த்தப்பட்டு மனிதர்கள் கேட்கும் வகையில் இந்த சத்தம் மாற்றப்பட்டு இருக்கிறது. கருந்துளை எப்படிப்பட்ட சத்தம் என்பதை மக்களுக்கு புரிய வைக்க நாசா இப்படி செய்துள்ளது.

    சத்தம்

    சத்தம்

    மேலே இருக்கும் வீடியோவில் நீங்களே பாருங்கள் அதன் சத்தம் எப்படி இருக்கும் என்று தெரியும். சோக சீனில் தமிழ் இசை அமைப்பாளர் வைக்கும் இசை போன்ற ஒலியை இந்த கருந்துளை வெளிப்படுத்தி உள்ளது. ஆனால் இந்த கருந்துளைக்கு அருகில் நாம் நின்றால் (ஒருவேளை அது நம்மை விழுங்கி சாப்பிடாத பட்சத்தில்) அதன் சத்தத்தை கேட்க முடியாது. ஏனென்றால் இந்த சத்தம் பல மடங்கு அளவு உயர்த்தப்பட்டு மனிதர்கள் கேட்கும் விதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. Credit NASA.

    English summary
    NASA releases sonifications souds of two black holes: Listen to these sounds NASA releases sonifications souds of two black holes: Listen to these sounds. இரண்டு கருந்துளைகளின் சத்தங்களை நாசா வெளியிட்டுள்ளது. பொதுவாக கருந்துளைகள் எப்படி இருக்கும் என்று புகைப்படங்களை மட்டுமே நாசா வெளியிட்டு இருக்கிறது. Credit NASA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X