Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரிய வளிமண்டல துளை.. பூமியை நோக்கி சீறி வரும் "சோலார் காற்று".. அதுவும் நாளைக்கே வருதாம்! என்னாகும்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சூரியனின் வளிமண்டத்தில் இருக்கும் துளைகள் வழியாக வர கூடிய சூரிய காற்றுகள் நாளை பூமியில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியன் ஒவ்வொரு 11 வருடமும் தன்னுடைய துருவங்களை மாற்றிக்கொள்ளும். அதாவது இதன் வட மற்றும் தென் துருவங்கள் இடமாற்றம் அடையும். வடக்கு தெற்கிற்கு செல்லும். தெற்கு வடக்கிற்கு செல்லும்.

அதன்பின் 11 வருடங்களுக்கு பின் இந்த வருடமும் துருவங்களை மாற்றி உள்ளது. இந்த மாற்றம் நடக்கும் சில நிமிடங்கள் சூரியன் மிகவும் கொதிநிலையுடன் காணப்படும்.

இதன் காரணமாக சூரியனில் இருந்து காந்தப்புல கதிர்கள் வெளியாகும். முழுமையாக மாற்றம் நடக்கும் அந்த நேரத்தில் சூரியனில் இருந்து மோசமான கதிர்கள் வெளியாகும்.

இந்த கதிர்வீச்சு காரணமாக அக்னி துகள்கள் எனப்படும் சூரியனில் இருந்து வெளியே வரும். இதை சோலார் பிளேர்ஸ் என்று கூறுவார்கள்.

சூரியன்

சூரியன்

இது போன்ற அக்னி துகள்கள் காரணமாக பூமியின் காந்த புலனில் பாதிப்பு ஏற்படும். அதேபோல் பூமியின் மின் காந்த் விசை, தொலை தொடர்பு ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்படும். இந்த நிலையில்தான் சூரியனின் வளிமண்டத்தில் இருக்கும் துளைகள் வழியாக வர கூடிய சூரிய காற்றுகள் நாளை பூமியில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. National Oceanic and Atmospheric Administration's Space Weather Prediction Center (SWPC) அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த கணிப்பை வெளியிட்டு உள்ளனர்.

அக்னி துகள்கள்

அக்னி துகள்கள்

பொதுவாக சூரியனின் காந்த புலன்களுக்கு அருகே இருக்கும் வளிமண்டல பகுதிகள் அடர்த்தி குறைவாக இருக்கும். இவை குறைந்த வெப்பத்துடன், குறைந்த அடர்த்தியுடன் காணப்படும். இதன் காரணமாக சூரியனின் துருவ பகுதிகளில் உள்ள வளிமண்டலத்தில் சிறிய சிறிய துளைகள் காணப்படும். இதை Coronal holes என்று அழைப்பார்கள். இந்த துளை வழியாக சூரியனின் மின் காந்த அலைகள் வெளியேறும். இதைத்தான் solar wind என்று அழைப்பார்கள்.

 solar wind

solar wind

இந்த solar wind பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு 2.9 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் செல்ல கூடியது. இந்த solar wind வெளியே வந்தவுடன் நமது சூரிய குடும்பத்தில் பல திசைகளுக்கு செல்லும். ஏன் நமது பூமியை நோக்கியும் கூட வரும். பூமி போன்ற அதிக மின் காந்த புலம் கொண்ட கிரகங்கள் இந்த solar windயை தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும். இது புவி காந்த புயலை ஏற்படுத்தும். இப்போது பூமியை நோக்கி வரும் solar wind காரணமாக பூமியில் லெவல் 1 புவி காந்தி புயல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 என்ன ஆகும்?

என்ன ஆகும்?

இந்த புவி காந்த புயல் நாளை பூமியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பூமியின் மின் காந்த புலனில் சிறிய பாதிப்பு ஏற்படும். இதனால் துருவப்பகுதிகளில் பல்வேறு விதமான மூலக்கூறுகள் வானில் மிதக்கும். இது வானத்தில் வித்தியாசமான வண்ணங்களை ஏற்படுத்தும். சமீபத்தில் Northern Lights புகைப்படங்களை நாசா வெளியிட்டது. அதுபோல் துருவ பகுதிகளில் வண்ணங்கள் ஏற்படும்.

பாதிப்பா?

பாதிப்பா?

ஆனால் இந்த புயல் காரணமாக ஏற்படும் துகள்கள் வலிமை குறைந்ததாக இருக்கும். இதனால் லேசான மின்சார பிரச்சனை, சில சாட்டிலைட் தொலை தொடர்பு பிரச்சனை, ஜிபிஎஸ் சிக்னலில் பிரச்சனை ஏற்படும். இதனால் போன் தொடர்பில் சில பிரச்சனைகள் ஏற்படும். சூரியனின் புலன்களில் காணப்படும் இந்த துளைகள் தற்காலிகமானது. இதனால் அடிக்கடி மின்காந்த அலைகள் பூமிக்கு வராது. எனவே இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+